பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

і ху இல்லாதார் பிறர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் பிள்ளைச் செல்வம் கிடைக்குமாம். அதைப் போல டாக்டர் பட்டம் இல்லாத பேராசிரியர் கும்பகோண ஹோமியாபதி ஆய்வுக் கழகத்தில் (Institute of Homeopathy) ஒரு டாக்டர் பட்டத்தைப் பெற்று அப்பட்டத்தைத் துணைவேந்தரிடம் காட்டி, முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிவு செய்து கொண்டிருக்கிறார் {குமிழ் 177). நிலைத்த செல்வமாகிய ஊக்கத்தினைத் தம்மிடம் கொண்ட பேராசிரியரின் பெருஞ் சாதனைகளில் இது குறிப்பிடத் தக்கது. இந்தக் கும்பகோண வழியைத் தத்துவக் கண்ணாடி கொண்டு நம்மைப் பார்ச்கச் செய்யும் அவருடைய சிந்தனை ஆற்றல் வியந்து போற்றற் குரியது. பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் வீண் வம்புக்குப் போகமாட்டார். வந்த வம்பையும் விடமாட்டார்; துணிச்சலோடு போராடி வெற்றி srr sirLrrrrr. பார்ப்பதற்கு இவர் பரம சாது; ஆனால் இந்தச் சாது மிரண்டால் காடு கொள்ளாது. திருவேங்கடவன் பல் கலைக் கழகத்தில் தொடர்ந்து வந்த நான்கு துணை வேந்தர்களிடமும் பணிவோடு, அன்போடு பழகி இருந் தாலும் தம்முடைய உரிமை இவர்களால் பறிபோகும் போது துணிச்சலோடு செயலாற்றி இருக்கிறார். * முறையற்ற முறையில் நடை பெற்ற என் பேட்டி’ (குமிழி. 209), இராமகிருஷ்ணன் மருத்துவக் கல்லூரியில் சேர்வதில் (குமிழி. 206) முதலான குமிழிகள் மூலம் இவருடைய துணிவை அறிகிறோம். நய வஞ்சகத் துரோகம், தனக்கு மட்டுமல்ல, பிறர்க்கும் ஏற்பட்டாலும் அதைச் சகித்துக் கொள்ளமாட்டார்; வெளிப்படையாகப் பேசி விடுவார். விளைவுகளைக் குறித்துக் கவலைப்பட மாட்டார். இந்த வெள்ளையுள்ளந்தான் இவருடைய நோயற்ற நீண்ட வாழ்வுக்கு மருந்து. 'அஞ்சாமை sy say&@55 gall (Bravery is the Mother of wit) arsārd