பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xyi பொன்மொழிக் கேற்ப, இவருடைய தெளிந்த சிந்தனைச் சிதறல்களுக்கு அஞ்சாமையே காரணம் , பேராசிரியர் அவர்களின் நினைவுக் குமிழிகள் ஒரு தன் வரலாற்று நிகழ்ச்சிக்கோவை மட்டுமன்று; அஃது ஒரு சிறந்த இலக்கியம்; வாழ்க்கை அநுபவங்களை இலக்கியச் சான்றுகளால் விளக்குவதும், இலக்கியம் கூறும் உண்மை களை, நீதிநெறிகளை, வாழ்க்கைத் தத்துவங்களைத் தம் சொந்த வாழ்க்கை நிகழ்ச்சிகளால் விளக்கிக் காட்டுவதும் இந்நூலின் சிறப்புகளில் தலையாயவை என்று கூறலாம். படித்த இலக்கியத்தை ஏட்டிலே நிறுத்திவிட்டாமல், வாழ்க்கைப் பயணத்தில் அதன் உண்மைகளை ஒருவர் எவ்வாறெல்லாம் உணர்ந்து, சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும். தன்னைத்தா.ே அவ்விலக்கிய ஒளியில் ஆற்றுப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உண்மைகளை மிகத் தெளிவாக இந்நூல் விளக்குகிறது. கற்ற இலக்கியங் களெல்லாம், வாழ்க்கைப் பாதையில் கால் வழுக்கும்போது உற்றதுணையாக உதவுவதைப் பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் பல பாடல்களின்வழி இந்நூலில் ஆங்காங்கு குறிப்பிட்டிருப்பது பாராட்டற்குரியது. மேல்நிலையிலுள்ள அதிகாரிகள் தமக்கு அனுப்பி வைக்கும் கோப்புகளில் கீழ்மட்டத்தில் உள்ள எழுத்தர்கள் எழுதி வைக்கும் குறிப்புகளைப் பாராமல் பொறிபோல் (Mechine) கைநாட்டுச் செய்வது (பக். 213) இன்றும் நிகழ்ந்து வருகிற கொடுமையே. ஆர்வமுள்ள ஆய்வாளர் கள் முனைவர் பட்டத்திற்குப் பதிவு செய்வதற்கு ஆயிரம் தடைக்கற்களைப் போடும் கல்விக் கழகங்கள் இன்றும் இல்லாம வில்லை, கல்விக் கழகங்களில் இவ்வாறு இன்று நடக்கும் கண்மூடித்தனமான முறைகேடுகள், அவற்றிற்குச் சாதகமாக அமையும் சட்டதிட்டங்கள், சட்டதிட்டங் களைச் செக்கு மீாடுகள் போன்று பின்பற்றும் கல்வி