பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் என்கண்ணை மறந்துன் இரு கண்களையே என்னகத்தில் இசைத்துக் கொண்டு நி கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே நான்கண்டு நிறைவு கொண்டு வன்கண்மை மறதியுடன் சோம்பர்முதல் பாவ மெலாம் மடிந்து, நெஞ்சில் புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா எனக்கமுதம் புகட்டு வாயே!” 1941-ஆண்டு ஜூன் முதல் துறையூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியனாகப் பணியாற்றிய காலம் முதல் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற வேண்டும் என்ற கனவு இருந்து கொண்டு வந்தது. இந்தக் கனவு 1950 ஜூலை மாதம் காரைக்குடிக் கற்பகநிலைய விநாயகமூர்த்தி (சா. க)யின்கருணையால் நான் சிறிதும் எதிர்பாராமல் புதி தாகத்தொடங்கப்பெற்ற அழகப்பாஆசிரியர்க் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியனாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததால், சிறிது நனவாகியது. இங்குப் பணியாற்றிய பத்தாண்டுக் காலத்தில் அறிவியல், கல்வியியல், கல்வி உளவியல், சங்க இலக்கியங்கள், கம்பராமாயணம், வில்லி பாரதம் போன்றவற்றில்அதிகமாக ஆழங்கால்பட்டு துணுகிப் பயின்றேன். பலதுறைகளில் ஏழு பெரிய நூல்கள் எழுதி மிகுபுகழ் பெற்றேன். இக்காலத்தில் 1958 தொடங்கிச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நுழைய மூன்று முறை முயன்றேன். என் தகுதி-திறமையால் கிடைக்கும் வாய்ப்புகள் இருந்தும், பழம் நழுவிப் பாலில் விழாமல், கீழே வீழ்ந்தது. நான் திருப்ப கியில் பணியாற்ற வேண்டிய வாய்ப்பு தருவதற்காகவே ஏழுமலையான் 4. பா. க. கோவிந்தன் பாட்டு-3