பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXī வீதம் ஐந்தாண்டுகட்கு வழங்குவதாக உள்ள ஆணை வந்து சேர்ந்தது. இதனால் என்னிடம் புதிய உற்சாகம் பிறந்தது. இரவும் பகலும் கடுமையாக உழைத்து தமிழ்த் துறையை வளர்த்தேன். இந்தக் காலத்தில் தான் (1970-77) ஏழுமலையான் என்னை எண்ணற்ற சோதனைக்குள் ளாக்கி வாட்டி வளைவு எடுத்தான் . எனினும், எதையும் தாங்கும் இதயத்தையும் அளித்தமையால் நன்கு பணியாற்ற முடிந்தது. திருப்பதியில் நண்பர்கள் பலர் நான் பட்ட துன்பங்களையும் தொல்லைகளையும் அறிவார்கள். ஆயினும், ஏழுமலையான் குன்றின் மேலிட்ட விளக்குபோல் தமிழகமெங்கும் என் புகழ் பரப்பினான். இந்தக் குறிப்புகளையெல்லாம் தாங்கிக் கொண்டு கினைவுக் குமிழிகள் (நான்காம் பகுதி) வெளி வருகின்றது. சில்வாழ் பல்பிணிச் சிறியேன் மறைந்த பிறகும் திருப்பதி யில் தமிழ் வளர்க்க யான் மேற்கொண்ட முயற்சி வரலாறாக என்றும் நின்று நிலவும் என்பது என் திடமான நம்பிக்கை, என் வாழ்க்கை வரலாற்றின் இப்பகுதி (நான்காம் பகுதி) பெரிதாக வளர்ந்தது; துறையூர், காரைக்குடியில் பணியாற்றிய காலத்தைவிட சற்றேறக்குறைய இரட்டிப் பான காலம் (17 ஆண்டுகள்) ஆதலால் நூல் வளர்ந்ததில் வியப்பில்லை. இப்பெரிய நூல் வெளிவருமா? என்று எண்ணித் தவித்துக் கொண்டிருந்த நிலையில் எம்பெரு மானின் கருணையினால் கருணாநிதியின் தமிழக அரசு ரூ 8000/-நிதி உதவியது (இது அரசுத் திட்டத்தில் அதிக பட்ச உதவி). இது கிட்டத்தட்ட முட்டுவழியில் மூன்றில் ஒரு பங்காக இருந்தபோதிலும் இறையருளால் நூல் வெளி வருகின்றது. அரசின் சால்பு எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரிதாயிற்று இந்த உதவியும்-செயப்பட்டார் சால்பின் வரைத்து. இங்ங்ணம் உதவிய தமிழக அரசுக்குத் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின்மூலம் என் நன்றியைப் புலப் படுத்திக் கொள்ளுகின்றேன்.