பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii இந்த நூலைச் செவ்விய முறையில் அச்சிட்டு உதவிய பூரீ கோமதி அச்சக உரிமையாளர் திரு. சி. சரவணக்குமார் அவர்கட்கும், எழில் கொழிக்கும் முறையில் அட்டை ஒவியம் வரைதல், அச்சுக்கட்டை தயாரித்து நான்கு வண்ணத்தில் அச்சிட்டு உதவிய கலை மன்னர் திரு P.N. ஆனந்தனுக்கும், நூலைக் கவின் பெறக்கட்டமைத் துத் தந்த அருமைத் தம்பி V. திருநாவுக்கரசுக்கும் என் உளங்கலந்த நன்றி என்றும் உரியது. இந்த நூலுக்கு அணிந்துரை நல்கிய பேராசிரியர் தானியேல் தேவ சங்கீதம் எம்.ஏ. வகுப்பு தொடங்கப்பட்ட ஆண்டில் (1970) முதலாவதாகச் சேர்ந்த முதல் மாணக்கர். கற்பதில் ஆர்வமும் அக்கறையும் காட்டி ஆசிரியர்களின் அன்பைக் கவர்ந்தவர். எம். ஏ.யில் முதல் வகுப்பில் முதல்வராகத் தேர்ந்து திருவள்ளுவர் தங்கப் பதக்கத்தைப் பெற்றவர். நான் ஒருவனே துறையில் டாக்டர் பட்டம் பெற்றவன். எனக்கு மட்டிலுமே ஆய்வு மாணவர்கட்கு ஆய்வு நெறியில் வழிகாட்டும் தகுதி இருந்தது. 1971-சனவரியில் சித்துார் அரசுக் கல்லூரியில் பேராசிரியர் பதவியை விட்டு விலகி எனக்குத் துணையாக விரிவுரையாளராகச் சேர்ந்த திரு P. செளரிராஜனை ஆய்வு மாணவராகச் சேர்த்துக்கொண்டேன் (1971-ஜூன் முதல்). 1972-ஜூனில் திரு. தேவசங்கீதம் எம். ஏ. யில் தேர்ச்சி பெற்றதும் ஆய்வு மாணவராகச் சேர்த்துக் கொண்டு. டாக்டர் மு. வ. பு, னங்கள்’ என்ற தலைப்பில் ஆயும்படி யோசனை கூற, அவரும் ஒப்புக் கொண்டார். டாக்டர் மு. வ. நூல்களை முதன் முதலாக ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்ட முதல் மாணவர் இவர் ஒருவரே. பல்கலைக் கழகம் தமிழ்த்துறைக்கு U G. C. மூலம் பெறும் ஆய்வு ஊதியம் (Fellowship) ஒதுக்கவில்லை; புதிதாகத் தொடங்கப் பெற்ற சிறு துறை என்று கருத்தில் கொண்டு ஒதுக்காதுவிட்டுவிட்டது. தெலுங்குத் துறையில் மூவருக்கு நிதி ஒதுக்கப் பெற்றது. அப்போது தெலுங்குத் துறைப் பேராசிரியராக இருந்தவர். டாக்டர் ஜி. என்.