பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

捧谕* xxiii ரெட்டி; பரந்த நோக்க முள்ள பெருமகன். மூன்றில் ஒன்றை எங்கள் துறைக்கு விட்டுக் கொடுக்குமாறு: வேண்டினேன். அவரும் பெருமனம் கொண்டு விட்டுக் கொடுத்தார்; எங்கள் துறைக்குத் தருவதற்காகவே விட்டுக் கொடுப்பதாகப் பல்கலக்ை கழகத்திற்கும் எழுதினார். பல்கலைக் கழகமும் அதனை ஒப்புக்கொண்டு அதனை எங்கள் துறைக்கு வழங்கியது. இதனால் தேவ சங்கீதத்திற்கு மாதந் தோறும் ரூ 500 ஆய்வு ஊதிய மாகவும் ஆண்டொன்றுக்கு இதர செலவுகளுக்கு ரூ 1500/-ம் கிடைத்ததன. இந்த உதவி கிடைக்காவிடில் தேவசங்கீதம் டாக்டர் பட்டம் பெற்றிருக்க முடியாது. தமிழ்த்துறையும் முதல்தரமான மாணவர் ஒருவரைத்துறை யின் முதல் ஆய்வு மாணவராகப் பெறும் வாய்ப்பையும் இழந்திருக்கும். இறையருள் துணை நின்றது என்பது என் கருத்து. இரண்டாம் ஆண்டு இத்தொகை ரூ 750 ஆக உயர்ந்தது; இதர செலவுகளுக்கான தொகையும் 2000; ஆக உயர்ந்தது. 1975-76 இல் துறையில் விரிவுரை யாளராகவும் சேர்த்துக் கொண்டேன். இதுவும் இறை யருளே. என் துறையில் எனக்கு அடுத்தவராக இருந்த அன்பர் இதற்குப் போட்ட முட்டுக்கட்டைகளைத் தகர்த் தெறியும் பணியும் இருந்தது. நான் ஒய்வு பெற்ற பிறகு டாக்டர் சங்கீதம் துணைப் பேராசிரியரானார். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார் என் நண்பர்; இதனைத் தகர்த் தெறியவும் என் பங்கு சிறிது இருந்தது. சென்ற ஆண்டு (1989 ஜூலை முதல்) பேராசிரியர் பதவி வந்த போது தமிழக அரசு மானியம் (ஆண்டு ஒன்றுக்கு 7.5, 000/-) பெறுவதற்குப் பெரிதும் முயன்று பெறுவதில் நேர் பங்கு கொண்டேன். இதற்கும் திருப்பதியில் துறையிலிருக்கும் ஒருவரால் போடப்பெற்ற முட்டுக் கட்டைகளையும் தகர்த்தெறிய வேண்டி இருந்தது. கல்வி அமைச்சரும் முதல்வரும் பெருமனம் கொண்டு இதனை வழங் கினார்கள். கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் தான் (1969) என் பத்தாண்டு முயற்சியால் முதன்