பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதி வாழ்வில் குமிழி-157 1. பல்கலை கழகப் பணி ஏற்றல் திருப்பதி சென்று திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தில் தமிழ்த் துறையில் விரிவுரையாளராகச் சேர்வதென உறுதியாயிற்று. புதிய பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் பதவி 1960 இல் தான் ஏற்பட்டது. நான் தான் தமிழ்த்துறையின் தொடக்கத்திற்குப் பிள்ளையார் சுழி போடவேண்டியவனாக இருந்தேன். சென்னையில் துணைவேந்தர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு அவர்கள் இல்லத்தில் நடந்த பேட்டியில் துறை வளர்வதற்குரிய குறிப்பினைத் துணைவேந்தர் பேச்சிலிருந்து அறிந்து கொண்டமையால் நான் கருவியாக இருந்து பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டல்' ஏழுமலையான் திருவருளால் வளர்ப்பதென உறுதி கொண்டேன். தியாக உணர்வும் உண்மையான தமிழ்ப் பற்றும், இன்னல்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய இதயமும், பலனை எதிர் பாராது கடமையைச் செய்’ என்ற கண்ணனின் மறை மொழியில் நம்பிக்கையும் உள்ளவர்கட்கு முடியாத காரிய மும் உண்டோ? வினைத்திட்பம் என்பது மனத்திட்பம் என்று வள்ளுவரும் கூறியுள்ளாரன்றோ? 1. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் காப்பு-2