பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்கலைக்கழகப் பணியேற்றல் 7 முறைப்படி (Rotation) முதல்வராக இருப்பார். பல்கலைக் கலகத்திற்குத் துறையிலிருந்து போகும் கடிதங்கள் யாவும் முதல்வர் மூலம்தான் செல்ல வேண்டும். துறைகட்டுத் தேவையானவற்றை முதல்வர் மூலம்தான் பெறுதல் வேண்டும் பல்கலைக்கழகமும் பல்கலைக்கழகக் கல்லூரியும் (University College) ஒரே வளாகத்திலிருப்பதால் துறையி லுள்ளவர்கட்கு எந்தச் சங்கடமும் ஏற்படுவதில்லை. முதுகலை வகுப்பு மாணாக்கர்களும் ஆய்வு மாணாக்கர்களும் இருப்பதால் மாணாக்கர்கள் பற்றிய அன்றாடப் பிரச்சினைகள் கல்லூரியிலேயே தீர்ந்து விடும். நான் முதலில் சேர்ந்த பொழுது (1960) இளங்கலைப் பட்டப் படிப்பு மாணாக்கர்களும் பயின்று வந்தனர். 1972 வரை இந்த அமைப்பு இருந்து வந்தது. அதன் பிறகு இளங்கலைப் பட்டப் படிப்பை இக்கல்லூரியினின்றும் நீக்கி விட்டனர். பல்கலைக் கழக வளாகத்தை அடுத்தடுத்த வளாகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்பு வரைப் பயில்வதற்கு மகளிர்க்கு பதுமாவதி கலைக் கல்லூரி என்ற ஒன்றும், ஆடவர்க்கு வேங்கடேசு வரா கலைக் கல்லூரி என்ற ஒன்றும் உள்ளன. இவை இரண்டும் திருமலை-திருப்பதி அறநிலைய ஆட்சிச்குக்கீழ் அடங்கியவை. 19 2க்குப் பின்னர் கோவிந்த ராஜ சுவாமி கலைக்கல்லூரி என்ற ஒன்றும் அற நிலைய ஆட்சியின்கீழ் புதிதாகத் தொடங்கப் பெற்று நன்முறையில் இயங்கி வரு கின்றது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஆயிசத்திற்கு மேற் பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர், இவர்களுள் முதுகலைப் படிப்பிற்குப் பல்கலைக்கழகக் கலைக் கல்லூரிக்குத்தான் வருதல் வேண்டும். திருவேங்கடவன் பல்கலைக்கழகக்தின் ஆட்சியின் கீழ் உள்ள தனியார் கல்லுரரிகளிலும் அரசுப் பொறுப்பிலுள்ள கல்லூரிகளிலும் முதுகலை வகுப்புகள் இல்லை. சரியான வசதிகள் ஏற்படுத்தித் தர முடியாதென்றோ வேறு என்ன காரணத்தினாலோ முதுகலைப் பட்டப் படிப்