பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& நினைவுக் குமிழிகள்-4 பிற்கு அக்கல்லூரிகளில் வாய்ப்புகள் ஏற்படுத்தப் பெற வில்லை. ஆனால் அனந்தப்பூர், காவலி, கடப்பை, கர்நூல் இந்த இடங்களில் பல்கலைக்கழக மையங்கள் நிறுவப் பெற்று முதுகலைப் பட்டப் படிப்பிற்கும் ஆராய்ச்சிப் பட்டப்படிப்புகளுக்கும் வாய்ப்புகளும் வசதி களும் செய்யப் பெற்றுள்ளன. இத்துடன் இவற்றை நிறுத்திக் கொண்டு யான் கல்லூரியில் சேர்ந்ததுபற்றிக் கூறுவேன். நான் சென்ற போது நிரந்தர முதல்வர் பேராசிரியர் டாக்டர் T. A. புருடோத்தம் (தத்துவத் துறைப் பேராசிரியர்) சில மாதங்கள் விடுப்பிலிருந்தபடியால் பேராசிரியர் டாக்டர் எஸ். இராமச்சந்திரராவ் (இயற்பியல் பேராசிரியர்) முதல்வர் பொறுப்பில் இருந்தார். அவரிடம் என் சான்றிதழ்களையும் சேரும் அறிக்கையையும் தந்து பணியில் அமர்ந்தேன். வளர்ந்து வரும் பல்கலைக் கழகத்தில் இடநெருக்கடி அதிகம். கல்லூரியே திருமலைதிருப்பதி அறநிலையத்திற்குக்கீழ் இயங்கி வந்த கலைக் கல்லூரிக்குரிய கட்டடத்திலும், பல்கலைக்கழக அலுவலகம் மேற்படி அறநிலையத்தின்கீழ் இயங்கின பதுமாவதி மகளிர்க் கலைக்கல்லூரிக் கட்டடத்தின் தரை தளத்திலும் செயற்பட்டு வந்தன. மகளிர்க் கல்லூரி மேல் மாடியில் இயங்கி வந்தது. பல்கலைக்கழகம் (1954) தொடங்கி ஆறாண்டுகள் ஆயினும், கட்டட வேலைகள் செயல் துடிப்பும் செயல்திறமையும் மிக்க துணைவேந்தர் திரு. எஸ். கோவிந்தராஜுலு நாயுடு அவர்கள் சீரிய தலைமையில் நடைபெற்று வந்த போதிலும் இயற்பியல், வேதியியல், தாவர இயல் துறைகட்கென்று ஒரு மூன்று மாடிக் கட்டடமும் விலங்கியல், நில உட்கூற்றியல் துறைக்கென்று ஒரு மூன்று மாடிக் கட்டமும் நிறைவு பெறும் நிலையிலிருந்தன. பல்கலைக் கழகத்திற்கென்று ஒரு னிக் கட்டட வேலை தொடக்க நிலையிலிருந்தது. அங்ஙனமே இலக்கியக் கூட்டங்கள், விழாக்கள் நடைபெறு