பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 இ நினைவுக் குமிழிகள்-4 யும் விட ஒரு பத்தாண்டாவது மூத்தவனாக இருப்பேன்: அதிக மதிப்பு வைத்திருந்தமைக்கு வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். புரையறக் கலந்து எல்லோரிடம் இன்முகத் துடன் பழகுவதைப் பொறுத்துதான் அன்பும் மதிப்பும் மரியாதையும் வரும் என்பது என் தாழ்மையான கருத்து. சேர்ந்து சில திங்களுக்குள் எனக்கு ஒரு புதிய இரும்பு அலமாரி (Godrel) தரப் பெற்றது. என் நூல்கள் முதலிய வற்றை அதில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடிந்தது. 1960லிருந்து இந்தி, தத்துவம், விலங்கியல், தெலுங்கு போன்ற ஐந்திடங்கட்குத் தள்ளப் பெற்றேன். எங்கு இடம் கிடைக்குமோ அங்கெல்லாம் தள்ளப் பெற்றேன். 1958லிருந்துதான் புதிதாகக் கட்டப் பெற்ற கலைக் கட்டடத்தில் ஒரு சிறிய அறை தரப்பெற்றது. 1970-இல் தமிழ் எம். ஏ. தொடங்கப்பெறும்வரை 'சிறுகக் கட்டிப் பெருக அதில் வாழ்ந்தேன். இரண்டு தடவைகள் தமிழ்ப் பாடத் திட்டக்குழு கூட்டம் கூட அச்சிறு அறையில்தான் நடைபெற்றது. இந்தக் கூட்டங் கட்கு ட க் ட ர் மு. வரதராசன், பேராசிரியர் கோ. சுப்பிரமணிய பிள்ளை (அண்ணாமலைப் பல்கலைக் கழகம்), பேராசிரியர். யூ. ஆலால சுந்தரம் செட்டி யார் (சென்னை கிறித்துவக் கல்லூரி, தாம்பரம்) இவர்கள் 1970 வரையில் வந்து கொண்டிருந்தனர். ஆனால் டாக்டர் மு.வ. மட்டிலும் என் வேண்டுகோளுக்கிணங்க பாட திட்டக் குழுவின் தலைவராக இருந்து வந்தார்: அவர் 1974-இல் திருநாடு அலங்கரிக்கும் வரை அப்பதவி யில் இருந்து வந்தார்.