பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-158 2. துணைவேந்தரைச் சந்தித்தல் கல்லூரியில் வேலை ஒப்புக் கொண்ட அன்று மாலையே இந்தித் துறைத் தலைவர் டாக்டர் வி. பி. சிங்க் தன் துறை உதவியாளர் கிருட்டிணன் என்பாரை என்னுடன் அனுப்பி தான் ஊரில் தங்குவதற்கு ஒர் அறையைக் கண்டறிந்து அதை அமர்த்திக் கொடுக்குமாறு பணித்தார். அந்தச் சிறுவன் உள்ளுரைச் சார்ந்தவனாதலால் அன்று மாலையே தீர்த்த கட்டத் தெருவில் ஒரு சிறிய அறையை மாதம் ரூ 20lவாடகையில் அமர்த்திக் கொடுத்தான். மின்கட்டணம் உட்பட தங்குவதற்கென்று மாதம் ரூ. 25). செலவாயிற்று. இரண்டு ஆண்டுகள் ஏதோ தண்ணீர் வசதி இருந்தது. அதன்பிறகு குழாயில் தண்ணிர் வருவதில்லை. நான் தங்கியிருநத அறை திரு K. சுப்பிரமணிய அய்யர் என்ற நகராண்மைக் கழக அலுவலர் வீட்டின் பின்புறத்தி, லிருந்தது. என் அறை தீர்த்த கட்டத் தெருவில் இருந்தது. அவர் வீட்டு முகப்பு கங்கை கொண்டான் மண்டபத் தெருவில் (என் அறைக்குப் பின்புறம் வீடு இருந்தது) இருந்தது. வாடகை கோடுக்கும்போது சுற்றிக்கொண்டு போக வேண்டியநிலை. சற்றேறக்குறைய 100 அடி நடந்து செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அடிக்கடிக் கொல்லைப் புறமாக வரநேர்வதால் இந்த நடையுமின்றி வாடகை எளிதாக அவர்கள் கைக்குப் போய்ச் சேரும்.