பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3 நினைவுக் குமிழிகள்-5 பணியில் சேர்ந்து ஒரு வாரத்திற்குள் காரைகுடியி லிருந்து என் மிதிவண்டியும் இரயில் மூலம் வந்து சேர்ந்தது. இரவில் மிதிவண்டியை நடைபாதையில் (இடைக்கழி போன்ற ஒரு சிறிய இடம்) வைத்துக் கொள்வேன். அந்த இடைக்கழிக்கு அமைக்கப்பெற்றுள்ள கம்பிக் கதவை இரவில் பூட்டிவிடுவேன். மிதிவண்டியும் பாதுகாப்பாக இருக்கும். பெரும்பாலும் என் அறைக்குப் பின்புறத்திலுள்ள மேற்படி வீட்டின் பின் பகுதி குடும்பத் துடன் தங்குவோருக்கு வாடகைக்கு விடப் பெறும். வசதிகள் குறைவாக இருந்ததால் யாரும் நிரந்தரமாகத் தங்குவதில்லை. அறையில் தங்கியிருந்த ஆராண்டுக்காலத் திலும் பெரும்பாலும் இப்பகுதி காலியாகவே இருக்கும். என் அறைக்குப் பக்கத்தில் அடுத்து ஒரு சிறிய அறை இருந்தது, என அறையில் பாதி அளவுதான் அது. அதில் ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்க லாம்; இந்த அறையும் இரண்டு அறைகட்கும் இடையி விருந்த இடைக்கழியும் முதலாழ்வார்கள் மூவரும் முதன் முதலாகச் சந்தித்த திருக்கோவலூரிலுள்ள இடைக் கழியை நினைவூட்டுவதாக இருந்தது. திவ்வியப் பிரபந்தத் தில் நாடோறும் சில பாசுரங்களை ஒதுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்ததால், அந்த நூலைக் கையி லேடுக்கும் போதெல்லாம் : அன்பே தகளியா' வைய திம் தகளியா' ' திருக்கண்டேன்' என்ற முதல் திரு அந்தாதிப் பாசுரங்கள் என் மனத்தை நிறைவிக்கும். தனிமை, என் சிறுவர்களின் நினைவு, சிறுவர்கள் எப்படிப் படிக்கின்றார் களோ என்ற கவலை அடிக்கடி மனத்தில் எழுந்தாலும் நூல்கள் எழுதும் பணியும் பார்வைப்படிகளைச் சரி பார்த்து அஞ்சலில் சேர்க்கும் பணியும் திவ்வியப் பிரபந்த ஆய்வும் அவற்றை மறக்கடிக்கும். பணியை ஒப்புக்கொண்ட ஒரு சில நாட்களில் துணைவேந்தர் திரு எஸ். கோவிந்தராஜுலு நாயுடு அவர்களை அவரது திருமாளிகையில் சந்தித்தேன். இது