பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தரைச் சந்தித்தல் 13. மரியாதைக்காக ஏற்படுத்திக் கொண்ட சந்திப்பு. சாதாரணமாகக் காலையில் அவரைச் சந்திக்கலாம். பைஜமா ஜிப்பாவுடன் காணப்படுவார். தோட்டத்தில் உலாவுவார். அப்போது சந்திக்கலாம். செளலப்பியமே உருவெடுத்தாற் போன்ற எளிமையுடன் காணப் படுவார். நான் திருப்பதியில் பணி ஏற்றுக் கொண்ட போது எனக்கு வயது நாற்பத்து மூன்று. தென்னிந்தியா வில் புகழ்பெற்ற ஒரு பெரிய கல்லூரியில் பேராசிரியனாக இருந்து விட்டு என் நற்பேற்றின் பயனாகத் திருப்பதியில் மாதம் ரூ 153| இழப்பில் பணியில் சேர்ந்தவன். இறுதி வரையிலும் இந்த இழப்பு ஈடு செய்யப் பெறவில்லை. இதையெல்லாம் துணைவேந்தர் அறியாதவர் அல்லர். சிக்கனத்தில் சிறந்தவராதலால் இவையெல்லாம் அவர் மனத்தில் இடம் பெறுவதில்லை. ஒருவர் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தால் அவரைப் பேட்டியில் மடக்கி எதிர்காலத்தில் ஏற்படும் பல நன்மை களை எடுத்துக்காட்டி துணைப் பேராசிரியராக (Reader) நியமனம் செய்து விடுவார். இப்படியே ஒருவர் எந்த வேலைக்கு மனுச்செய்திருந்தாலும் அவரை அடுத்த கீழ்நிலையிலுள்ள பணியில் அமர்த்திவிடுவதில் மிக சமர்த்தர், ஒரிரண்டு ஆண்டுகளில் அவரை நன்கு கவனித்து, அவர் திறமைகளை அளந்து எடைபோட்டுக் கணித்து விடுவார், திரு, எஸ். கோவிந்த ராஜுலு நாயுடு எனக்குத் தந்த அறிவுரை இது: "மிஸ்டர் ரெட்டியார், ஒன்று தான் உங்கட்குச் சொல்லுகின்றேன். அஃது உங்கள் நன்மைக் காகத்தான். இப்பக்கம் உள்ள ரெட்டிகளிடம் நன்கு கலந்து பழகாதீர்கள். அஃது உங்களை உள்ளுர் அரசியலில் (Local politics) கொண்டு போய் விட்டுவிடும்; உங்கள் மனத்தையும் கெடுத்து மன அமைதியையும்குலைத்துவிடும். உங்கள் கடந்தகால வாழ்க்கையையும் நீங்கள் இதுகாறும் எழுதி வெளியிட்டுள்ள நூல்களையும் கவனித்த பிறகும்,