பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.證靈 தினைவுக் குவிழிகள் சென்னையில் என் இல்லத்தில் நடந்த நியமனக்குழுவின் மூன்னர் குழு கேட்ட வினாக்களைத் தாங்கள் சாதுர்ய மாகவும் அடக்கமாகவும் அளித்த விடைகளைத் கூர்ந்து கவனித்த பிறகும் நீங்கள் அறிவு, ஆராய்ச்சி இவற்றில் அதிக நாட்டமுள்ளவர் என்பது எனக்குத் தெரிந்தது, நீங்கள் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஏராள மான நூல்களைப் படியுங்கள். தக்க மன நிலை உருவாகும் போது எழுதுங்கள். பல்கலைக் கழகச் சூழ்நிலை உங்கள் போக்குக்கும் அவாவுக்கும் ஏற்றபடி இருக்கும். நல்ல நூல்களை வாங்குவதற்கு நூலகரிடம் தேர்ந்தெடுத்த நூல்பட்டியலைத் தாருங்கள். அவரிடமும் பேசுகின்றேன்: அவரும் தாங்கள் பரிந்துரைக்கும் நூல்களையெல்லாம் வாங்குவார். நூலகத்தில் தமிழ்ப்பிரிவினை வளமாக்குவது உங்கள் பொறுப்பாக இருக்கட்டும். நீங்கள் நாட்டின் தென்பகுதியிலிருந்து திருப்பதி வந்திருக்கிறீர்கள். நீங்கள் விரும்பும் போதெல்லாம் என்னைச் சந்திக்கலாம்; உங்கள் தேவைகளை எடுத்துக் கூறலாம். துறைவளர்ச்சியைப் பற்றியும் உங்கள் யோசனைகளைக் கூறலாம்” என்றார். நான் அவரிடம் பழைய நிகழ்ச்சியொன்றை எடுத்துக் கறி அதில் யான் எடுத்துக் கொண்ட முயற்சியையும் அதில் வெற்றி பெற்றதையும் தெரிவித்தேன். அவரும் நினைத்து பார்த்து என்னைத் தட்டிக் கொடுத்து வாழ்த்தி னார். அந்த நிகழ்ச்சி இது:- நான் பி. எஸ்.சி. எல். டி. பட்டத்துடன் துறையூர் ஜமீந்தார் உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியனாக இருந்தபோது (1943இல் என்பதாக நினைவு) தமிழ் எம். ஏ. தேர்வு எழுத விண்ணப்பித்துக் கொண்டேன்; மூன்று ஆண்டுகள் ஆசிரியராகப் பணி யாற்றியவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எந்தத் 1. இவரையும் இன்னொரு ஆட்சிக் குழு உறுப்பினர் ஜஸ்டிஸ் பஷிர் அகமத்தையும் சந்தித்ததை நினைவுபடுத்தினேன்.