பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நினைவுக் குமிழிகள்.கி கட்கும் நேராக அனுப்பி என் வேண்டுகோளைக் கவனித்து ஆதரவுள்ள மறுமொழி தருமாறு வேண்டினேன் என்பதை அவரை நினைவுகூருமாறு வேண்டினேன். நான் விடாக் கோண்டனாகவும், பதிவாளர் கொடாக் கொண்ட னாகவும் கடிதப் போரிட்டதைக் காட்டி இறுதியில் (1943இல் தொடங்கிய போராட்டம் 1947இல்) என் அருமைப் பேராசிரியர்-முதல்வர் ஜெரோம் பாதிரியார் விடாது வற்புறுத்தியமையால் இந்த விதி மாற்றப் பெற்றதையும் எடுத்துக்காட்டிப் பழைய நிகழ்ச்சியை நினைவுகூரச் செய்தேன். அவரும் மகிழ்ந்து எனது பொறுமையையும் விடாது முயன்ற மன உறுதியையும் மகிழ்ந்து பாராட்டி என்னை வாழ்த்தினார். ஒரு சில நாட்கள் கழிந்த பிறகு என் அறைக்குப் பக்கத்துத் தெருவிலிருந்த இரு பெரியார்களைச் சந்தித் தேன். ஒருவர், நிம்மகாய வீதியிலிருந்த நகராண்மைக் கழகத் தலைவர் திரு. முனிரெட்டி என்பவர்; இவர் பட்டம் பெறாதவர். நன்றாக ஆங்கிலம் பேசுபவர், மற்றொருவர். கங்கை கொண்டான் தெருவிலிருந்த திரு. எம். பலராமரெட்டி என்பவர்; பி. ஏ. பட்டதாரி. இவர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்; திருமண மாகாதவர், பொதுப்பணியில் அதிகமாக ஈடுபாடு உண்டு. யார் தவறுகள் செய்தாலும் அவற்றைக் கண்டு பொறுக்க முடியாதவர். பல்கலைக்கழக ஆட்சியில் நடைபெறும் சில தவறுகளை இவர் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை. இக்காரணத்தால் துணைவேந்தருக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு உண்டு. முதலில் நான் திரு. எம். பலராமரெட்டியைச் சந்தித் தேன். மிக அன்பாக இன்முகத்துடன் வரவேற்றார். மிக அன்பொழுகப் பேசினார். 'உங்களுக்குத் திருப்பதியில் ஏதாவது உதவிகள் தேவைப்படுமானால் என்னிடம் தாராளமாகச் சொல்லலாம். நான் மிகச் சிறியவன்.