பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நினைவுக் குமிழிகள்-கி ஒருவர் நடத்திக் கொண்டிருந்தார். மேல்புறமாக இருந்த என் அறையைக்யொட்டி ஒரு சிறு சாய்க்கடை அமைந்திருந்தது. விடுதியின் வேலையாள் பின்புதவாசல் வழியாக வந்து எச்சிலைகளை என் அறைப்பக்கம் போட்டு விடுவான். நாய்கள், பன்றிகள், எச்சிலையைப் பொறுக் கும் பிச்சைக்காரர்கள். இவர்களிடையே மும்முனைப். போராட்டம் இருக்கும், பெரும்பாலும் இலைகளில் அதிகம் ஒன்றும்இராததால்"மனிதர்கள்"ஒதுங்கி விடுவார்கள் நாய் களும்பன்றிகளுமே பலத்த குரல்களில் போராடும். இந்தக் கூச்சலும் குழப்பமும் பெரும்பாலும் மாலை ஏழு மணி முதல் இரவு 12 மணி வரை இருக்கும். என்னால் அமைதி யாகப் படிக்க முடிவதில்லை. நாற்றமோ மூக்கைத் துளைக்கும். நகரசுத்தியாளர்களும் அடிக்கடி இந்த இலை களை அப்புறப்படுத்துவதில்லை. பலமுறை திரு. பட்டிடம் இலைகளைத் தம் விடுதியையொட்டி ஒரு பெரிய தொட்டி யில் போடவும் அவற்றை அடிக்கடி அப்புறப்படுத்தவும் ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள்கள் விடுத்தேன். சொல்லும் போதெல்லாம் கவனிப்பதாகப் புன்முறுவல்’ செய்வார்; ஆனால் கவனிப்பதில்லை. நாற்றமோ தாங்க. முடிவதில்லையே. நல்ல அறை கிடைத்தும் அதில் சுகாதாரத்துடன் வாழ முடியவில்லையே என்று வருந்: தினேன். திரு. முனிரெட்டியைச் சந்தித்துப் பேசினால், இதற்கு ஒரு கழுவாய் பிறக்குமோ என்று எண்ணி அவரைச் சந்தித்து என் பரிதாப நிலையை எடுத்துச் சொன்னேன்; கவனிப்பதாகப் முறுவலித்தார். நான் சொன்னது இரவு எட்டு மணிக்கு. மறுநாள் காலை 3. நெருங்கிப் பழகிய பிறகுங்கூட அவர் பெயரைத் தெரிந்து கொள்ளவில்லை. மிஸ்டர் பட் என்றே அழைப்பேன். அவரும் என்னை மிஸ்டர் ரெட்டியார் என்றே விளிப்பார். அவர் தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளையும் நன்கு பேசுவார்.