பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தரைச் சந்தித்தல் 2 : நகரச்சுத்தித்தொழிலாளர்கள் ஐவர் அற்புதமாகச் செயல்பட்டனர் . சுமார் அரை பர்லாங் தொலைவுக்குச் சுத்தம் செய்தனர். நகராண்மைக் கழக நல வாழ்வுக்கு ஆய்வாளர் (Health inspector) ஒருவர் திரு பட் அவர் களிடம் பேசி எச்சிலைகள் போடும் தொட்டியொன்றுக்கு ஏற்பாடு செய்தார். நாள்தோறும் அந்த எச்சிலைகளை அப்புறப்படுத்தவும் நகரசுத்தி ஆட்களிடம் ஆணை பிறப்பித் தார். அந்த அறையிலேயே 1960 ஆகஸ்டு முதல் 1966 ஜூலை முடிய (ஆறு ஆண்டுகள்) என் தனி வாழ்க்கை நலமாகச் சென்றது 1966 ஆகஸ்டு முதல் என் மனைவியும் மக்களும்திருப்பதிக்கு வந்து சேர்ந்தனர். அது முதல் எனக்கு எல்லா வசதிகளும் ஏற்பட்டன. குமிழி-159 3. முதுகுப்புறமாகப் பேனாக் குத்து இடும்பத்தைவிட்டுப் பிரிந்து பல்வேறு கவலை களுடன் பணியைக் கவனித்துக் கொண்டு வந்தபோது பதிவாளரிட மிருந்து அவர் மேலெழுத்துடன் (Endarse ment) ஒரு கடிதம் வந்தது. இந்தக் கடிதம் காரைக்குடி அழகப்பர் பயிற்சிக் கல்லூரியின் தாளாளர் திரு. C W. C T. W வேங்கடாசலம் செட்டியாரிடமிருந்து வந்த கடிதம். இதனை நேராக எனக்கு அனுப்பாமல் பல்கலைக் கழகப் பதிவாளர் மூலம் அனுப்பியிருந்தமையால் அவ ரால் அனுப்பப் பெறுகின்றது. (Forwarded) என்ற வாச கத்துடன் எனக்குக்கிடைத்தது. சேர்ந்து ஒரு வாரத்தில் கடிதத்தில் (ஆணையில்) குறிக்கப் பெற்றிருந்த செய்தி இது. 'திரு. ந. சுப்புரெட்டியாருக்குக் கொடுக்கப் பெற்ற ஆணை தள்ளுபடி செய்யப் பெற்றது? இந்த