பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதுகுப் புறமாகப் பேனாக்குத்து 23 வில்லை. பணத்தை அனுப்பி விடுகின்றேன்' என்று சொல்லிக் கொண்டு விடை பெற்றேன். இந்த மதியீனமான ஆணையை பலருக்குத் தெரிவித் தால் நிர்வாகத்தின் மானம், பெருமை எல்லாம் கப்பல் ஏறும் என்பதை நான் அறிவேன். முட்டாள் கூட இந்த மதியினமான ஆணையைக் கண்டு நகைப்பான். இந்தச் சமயத்தில் புராணச் செய்திகளும் இதிகாசச் செய்திகளும் என் மனத்தில் எழத் தொடங்குகின்றன. கடவுள் மனிதர் களை ஏமாற்றிச் செயலாற்றுவிக்க வேண்டுமானால் ஓர் அந்தணச் சிறுவன். அல்லது கிழவேதியன் போலத்தானே வருகின்றான்? ஏன் ஒரு செட்டியாராகவோ, rத்திரி யனாகவோ வரக்கூடாது? கதைகளில் கூட அப்படி இல்லையே என்று யோசித்தபோது பிராமணர்கள் தாம் சாதுக்கள், ஒரு காரியம் செய்தால் யாரும் தவறு என்று நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையை உண்டாக்கியிருக்கின்றார்கள்’’ என்று எப்பொழுதோ தந்தை பெரியார் நான் மாணவனாக இருந்தபோது ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் சொன்னது நினைவிற்கு வந்தது. இன்னும் அவர், இப்படித்தான் பிராமணர்கள் தந்திரமாக ஏமாற்றுவார்கள்: சதி செய்வார்கள், கடவுள்கூட மக்களை ஏமாற்ற வேண்டுமானால் பிராமண வடிவத்தில் தான் தோன்றுவார். மாவலிச் சக்கரவர்த்தி யைத் திருமால் அந்தணச் சிறுவனாக வந்து தானே மூவடி நீலம் கேட்டு ஏமாற்றினார் ? கிழவேதியனாக வந்துதானே அதே திருமால் (கண்ணன்) கன்னனிடம் அவன் செய்த புண்ணியம் அனைத்தையும் பெற்றான்? கிழவேதியனாக வந்துதானே சீவகன் ஏமாற்றி சுரமஞ்சரியைத் திருமணம் புரிந்து கொண்டான்? அந்தணன் வடிவில் வந்துதானே இந்திரன் கன்னனின் கவசகுண்டலங்களைப் பெற்றுச் சென்றான்?' என்ற நிகழ்ச்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டே போனதும் நினைவிற்கு வந்தன. இறுதியில் 'பிராமணர்களிடம் கவனமாக இருக்க