பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நினைவுக் குமிழிகள்-4 வேண்டும். தந்திரசாலிகள். அவர்களிடம் விழிப்பாக இருத்தல் வேண்டும்” என்று எச்சரிக்கையும் விடுப்பார் . இவையெல்லாம் படலம் படலமாக என் மனத்தில் தோன்றின. இறுதியாக ஓர் இதிகாசச் செய்தி என்னுடைய அன்றைய நிலைக்கு ஒத்திருந்ததைச் சிந்தித்தேன். துரோணர் பொறாமையினால் :ே டனான ஏகலைவ னுடைய வலது கட்டை விரலை வாங்கினார். தம்படத்தை வைத்து வணங்கியே ஏகலைவன் வில்வித்தைக் கற்றுக் கொண்டதை பாராட்டாமல் இவ்வாறு செய்தார். குதிரை எட்டடி, பாய்ந்தால் குட்டி பதினாறு அடிபாயும்’ என்ற பழமொழிக் கிணங்க துரோணரின் மகன் அசுவத்தாமன் செய்த அடாத செய்கை என் மனத்தில் எழுந்தது. அந்தச் செய்கைதான் என்ன? பதினெட்டாம் போர் முடிவில் வீமனுக்கும் துரியோதன னுக்கும் நடை பெற்ற மற்போரில் துரியோதனன் தோற்றுக் குற்றுயிராய்க கிடக்கின்றான். இருதிறத்தாரும் அவரவர்கள் பாசறைக்குள் புக, கண்ணன் பஞ்சபாண்டவர் களையும் திரெளபதியையும் யாரும் அறியாமல் ஒரு காட்டிற்குள் அழைத்துச் சென்று மறைத்து வைக் கின்றான். குற்றுயிராகக் கிடந்த துரியோதனனை அசுவத்தாமன் வந்து காண்கின்றான்; அவன் நிலைக்கு இரங்குகின்றான். 'பாண்டவர்களை விடிவதற்குள் அழித்து வருவேன். என்று வஞ்சினம் கூறிச் செல்லு கின்றான். பாசறைக்குள் புகுந்து தன் தாதையைத் கொன்ற திட்டத்துய்மனின் தலையைத் துணித்துப் பாண்டவர்களைத்தேடுகின்றான்; அவர்கள் கிடைத்திலர். இளம் பஞ்ச பாண்டவர்களை அணுகுகின்றான். அவர்கள் தம் படையை எடுப்பதற்குள் அசுவத்தாமன் அவர்களைப் பாண்டவர்கள் என மயங்கி அவர்கள் தலைகளைக் கொய்து விடிவதற்கு முன் துரியோதனனை அடைந்து தான் கொணர்ந்த தலைகளை அவன் முன்