பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼6 நினைவுக் குமிழிகள்-4 போது காப்பான் என்று நினைத்துக் கொண்டேன்; காரைக்குடி யு. கோ. வங்கியில் இருந்த சேமிப்புக்கணக்குப் புத்தகமும் காசோலைத் தொகுதியும் என்னிடம் இருந்த தால் ரூ.1050 க்கு ஒரு காசோலையைக் கிழித்து ஒரு கடிதத் துடன் அனுப்பி வைத்தேன். கடிதத்தின் வாசகம் இது: உங்கள் கடிதம் கிடைத்தது. இத்துடன் ரூ 1050) க்கு ஒரு காசோலை.வருகின்றது. இது மூன்று திங்கள் ஊதியம்; நோட்டீசுக்குப் பதிலாக இத் தொகை. நான் கல்லூரியி லிருந்து விலகிக் கொள்வதை 27 நாட்களுக்குமுன் தெரிவித்து இரண்டாண்டு விடுமுறையும் பின்னர் வந்து சேரும் உரிமையும்;கேட்டுகடிதம் அனுப்பியிருந்தேன். அந்த 27நாள் ஊதியத்தைத் திரும்ப அனுப்ப வேண்டுகின்றேன். நான் அங்கிருந்தபோது தாங்கள் எனக்குக் காட்டிய அன்பை நன்றியுடன் போற்றுவேன். ஆனால் நான் அங்கு விடைபெற்றுக் வந்த பிறகு இப்படி முதுகில் குத்தியதற்கு மிக மிக வருந்துகின்றேன்' என்பது. நான் கேட்டபடி 27 நாள் ஊதியத்தைத் திருப்பி அனுப்பியது நிர்வாகம். கல்லூரியில் என்பணியேட்டில் விலகிக் கொண்டார்” (Resisned) என்று எழுதி வைத் து விட்டது. இக்குறிப்பு தமிழகத்தில் பணி செய்த 19 ஆண்டு ஒய்வு ஊதியம் பெறுவதில் தடையாக அமைந்தது. ஒன்பது ஆண்டு கடிதப் போராட்டத்தில் வேங்கடவன் அருளால் தடை நீங்கியது; ஒய்வு ஊதியம் வரும் அறிகுறி கள் தோன்றி அரசுடன் கடிதப் போக்குவரத்தில் உள்ளது. 1987- நவம்பரில் ஒய்வு ஊதியமும் கிடைத்தது. இறைவன் இப்படிச் சிலரைச் சோதிக்கின்றான். செடிநட்டவனுக்குத் தண்ணிர் ஊற்றத் தெரியாதா என்ன? திருப்பதியில் பணி யாற்றிய 17 ஆண்டுக்குரிய ஒய்வு ஊதியம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. அது விளங்காப் புதிராகவே உள்ளது. அதை வேங்கடவன் கவனித்துக் கொள்வான் என்று நம்பி வாளா இருந்து வருகின்றேன்; ஒராண்டுக்கு முன் உச்சி நீதிமன்றத்தில் உரிமை விண்ணப்பம் (Writ. petition