பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதுகுப் புறமாகப் பேனாக்குத்து 2?” தாக்கல் செய்தேன். ஆறு திங்களில் நீதிபதி ஒருவர். இது நியாயமான வழக்கு.ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஏற்றது' என்று சொல்லவே, என் வழக்குரைஞர் விண்ணப்பத்தையும் அதன் தொடர்பான அனைத்துத்தாள்களையும் நீதி மன்ற ஆணையுடன் எனக்கு அனுப்பிவைத்தார். இப்போது அந்த வழக்கு ஆந்திர மாநில உயர்நீதி மன்றத்தில் (ஐதராபாத்) உள்ளது. ஏழு மலையான் திருவருளால் நல்ல முடிவு ஏற்படும் என்று நம்புகின்றேன். நகாரா ws இந்திய அரசு வழக்கில் ஏற்பட்ட 'வழக்கு முடிவு' (1983) எனக்குச் சாதகமாக இருந்ததால் இந்த வழக்கு தொடரப் பெற்றது. குமிழி . 160 4. திருப்பதியில் திருத்தலப் பயணிகள் 15ான் தங்கியிருந்த அறைக்கும் கோவிந்தராஜ சுவாமித் திருக்கோயிலுக்கும் குறுக்கு வழியொன்றுண்டு. காந்தி சாலையில் நம்மாழ்வார் திருக்கோயிலின் மதிலை யொட்டிச் செல்லும் சந்து வழியாகச் சென்று (இக்கோயி லின் வடக்கு மாட வீதியில் உள்ளது) வடக்கு மாட விதியைக்கடந்தால் மணவாள மாமுனிகளின் சந்நிதியருகி லுள்ள படிக்கட்டுகளிலிறங்கி கோவிந்தராஜசுவாமியின் திருக்கோயிலை அடையலாம். கல்லூரியிலிருந்து மாலை யில் திரும்பியதும் சிற்றுண்டி அருந்தி கைகால் முகங்களைத் தூய்மைசெய்து கொண்டு குறுக்குவழியாகக் கோவிந்தராஜ சுவாமியின் திருக்கோயிலை அடைவேன். வாரம் மூன்று நாள் தவறாமல் கோவிந்தனைச் சேவித்து மகிழ்வேன். கோவிந்தன் என்ற திருநாமம் கண்ணன் குன்றம் ஏந்தி கல்மாரிகாத்தபோது இந்திரனால் அவனுக்கு வழங்கப் பெற்ற பெயர். திருக்கோயிலை அடையும்போது இந்த வரலாறு என் மனத்தில் குமிழியிட்டெழும்.