பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺岛 நினைவுக் குமிழிகள்-4 இந்த கோவிந்தராஜனைப்பற்றி மக்களிடையே சுவை யான வரலாறு ஒன்று வழங்கி வருகின்றது. திருமலையில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் வேங்கட கிருஷ்ணனும் திருப்பதியில் சயனத்திருக்கோலத்தில் காட்சி தரும் கோவிந்தராஜனும் சகோதரர்களாம். வேங்கட கிருஷ்ணன் பதுமாவதியைத் திருமணம் புரிந்து கொண்ட பொழுது பெருஞ்செலவு ஏற்பட்டுவிட்டதாம். இதற் காகக் குபேரனிடம் கடன்வாங்கினார்களாம். இதுகாறும் அக்கடன் தீராமல் கிடக்கின்றதாம். வட்டிகூட வருடந் தோறும் செலுத்த முடியவில்லையாம். வட்டிக்காசுகளை எண்ண முடியாமல் மரக்காலால் அளந்து தருகின்றார் களாம். இந்த நினைவாகத்தான் வட்டிக்காக திருவிழா நடைபெறுகின்றதாம். வேங்கடகிருஷ்ணனின் கடன் பற்றிய கணக்கு அவர் சகோதரர் கோவிந்தராஜனிடம் இருக்கின்றதாம். வட்டிக்காசுகளைக் குபேரனுக்கு அளந்து தரும் மரக்காவைத் தலைப்பக்கத்தில் வைத்துக் கொண்டு சயனத்திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றா சாம் கோவிந்தராஜன். இங்ங்ணம் பக்தர்களிடம் எத்தனையோ கட்டுக்கதைகள் வழங்கி வருகின்றன. இக் கதைகளும் பக்தி நெறி முறைகளைக் கெடாமல் பாது காத்து வருகின்றன. திருப்பதியிலிருந்தாலும் வேங்கட நாதனை அடிக்கடிச் சேவிக்க முடிவதில்லை. அவன் அருள் கிடைக்கும்போது அவனைச் சேவிக்கும் பேறு கிட்டும். அப்பொழுதெல்லாம், தாயே தந்தையென்றும் தாரமே, கிளை மக்களென்றும். நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பதோர் ஆசையினால் கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோளொன் றிலாமையினால் என்றே னும் இரந்தார்க் கினிதாக உரைத்தறியேன்