பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதியில் திருத்தலப் பயணிகள் 33 கொள்கைப்படி பகவத் கைங்கரியத்தைவிட பாகவத கைங்கரியம் சிறந்ததன்றோ? ஆழ்வார்களின் தலைவராகிய நம்மாழ்வாரே பாகவத கைங்கரியத்தின் சிறப்பையும் பெருமையையும் சொல்லி யுள்ளார். வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்று உள் கலந்தார். அடியார் தம்அடி யாரெம் அடிகளே." "வடிவாா சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’ (திருப்பல்லாண்டு) என்று திருவாழியாழ்வானோடு உண்டான சேர்த்தியில் ஈடுபட்டுப் பல்லாண்டு பாடுவார் களாகில் அவர்களின் அடிமைப்பட்டவர்களுக்கு அடிமைப் பட்டவர்கள் எமக்குத் தலைவராவார்’’ என்று கூறுவதைக் காணலாம். மேலும் இந்த ஆழ்வார்,

  • எந்தைபிரான் தனக்கு அடியார் அடி யார் த ப மடி

யார்.அடி யார் தமக்கு அடியார் அடியார் தம்மடி யார்.அடி யோங்களே." என்று கூறுவதையும் காணலாம். எம்பெருமானுக்கு ஏழு தலைமுறையளவான அடிமையின் எல்லையிலே நிற்பவர் களுக்கு நாங்கள் அடிமைப்பட்டவர்கள்' என்கின்றார் இதில். இங்கே சட்டு ரீசூக்தி : ‘'இப்போதும் தம்முடைய ருசிக்கு அவதியுண்டாய் (அவதி-முடிவு) இவ்வளவிலே நின்றாரல்லர், சந்தஸ்ஸிலே (யாப்பில்) இதுக்கு அவ்வருகு போக வொண்ணாமே நின்ற தித்தனையிறே. * செய்யுளின் நிர்ப்பந்தத்தை நோக்கி இவ்வளவிலே தலைக் கட்டினாரத்தனையல்லது 'இவ்வளவு சேஷத்துவம் 5. திருவாய், 3, 7: 9. 6. டிெ 3. 7: 10 நி-3