பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதியில் திருத்தலப் பணிகள் 35 உணவைத்தான் அவ்வாறு அலங்கோலம் செய்வரேயன்றி பானையிலுள்ள சோறு முழுவதையும் அங்ங்ணம் செய் வாரல்லர். இரயிலடியிலுள்ள குழ்விகளும் சிறுவர்களும் இன்னும் இரண்டு வேளைகட்குரிய உணவையும் இவ்வாறு உழப்புவார்கள். பெரியவர்கள் கூட சோறு கெட்டுவிடுமே என்ற நினைப்பே இல்லாதிருக்கும்போது பாவம் சிறுவர் களும் குழவிகளும இதனை எங்ங்ணம் அறிவர்? பலநாட்கள் இத்தகைய காட்சிகளைக் கண்டுள்ளேன். தமிழ்நாட்டவர் களில் சிறுபான்மையோரும் ஆந்திரம், கர்நாடகம் இந்த மாநிலத்திலிருந்து வருவோரில் பெரும்பான்மையோரும் இங்ங்ணம் செயற்படுவதைக் கண்டுள்ளேன். திருமலையில் எம்பெருமான் தரிசனம் முடிந்ததும் வmசையாக வரும் பக்தர்களுக்கு வெண்பொங்கல், சருக்கரைப் பொங்கல், ததியோதனம், புளிச்சோறு போன்ற பிரசாதங்கள் சிறு இலைகளில் வழங்குகின்றனர். இவற்றை வழங்கும் பரிசாரகர்கள் கையைப் போட்டு உழப்புவதைப் பலசமயம் பார்த்ததுண்டு. தேவஸ்தானத் தில் சிறு கரண்டிகள் இல்லாமல் இல்லை. எடுத்து வருவதற்குச் சோம்பேறித்தனம். நாகரிகம் மிக்கவர்களாக கருதப்பெறும் பிராமணப் பரிசாரகர்கள் இங்ங்ணம் செயற் படும்போது நாகரிகம் அற்ற திருத்தலப்பயணிகள் முறை கேடாகச் செயற்படுவதை எங்ங்னம் தவிர்க்க முடியும்? கடுக்காய் அளவுக்கு இலட்டும் இப்போது பிரசாதமாக வழங்கி வருகின்றனர். அறியாமையே நிரம்பிய மனிதர்கள் முறைகேடாகக் செயற்படுவதால் அவர்கட்கு நோய்கள், வேறு கோளாறு கள் ஏற்படாதிருத்தலுக்கு கண்மூடிமெளனியாகி ஒன்றும் கண்டிராதவன் போல் நின்றுகொண்டு பார்க்கும் அந்தத் திருவேங்கடமுடையானின் திருவருளே காரணமாக வுள்ளது என்று கருதலாம்.