பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி - 6.1 5. இராமய்யாவும் பாலசுந்தர நாயக்கரும் såssor திருப்பதி சென்ற சில மாதங்களுக்குப் பிறகு நான் தங்கியிருந்த அறைக்குச் சொந்தக்காரரான திரு. கே. சுப்பிரமணியம் இல்லத்திற்கு திரு. சி.எஸ். இராமய்யா பி. ஏ. பி.எல், என்பவர் வந்தார். திரு சுப்பிரமணியமும் திரு. இராமய்யாவும் நெருங்கிய நண்பர்களாதலால் இவர் அடிக்கடி இந்த இல்லத்திற்கு வந்து மகிழ்வுடன் உரையாடிப் போவதுண்டு. ஒருநாள் எனக்கு திரு. சுப்பிரமணியம் திரு. இராமய்யாவை அறிமுகப்படுத்தி வைத்தார். திரு. இராமய்யா வக்கீல் வேலைக்குப் படித்தாரேயன்றி அத்தொழிலைச் செய்ததாதத் தெரிய வில்லை. நான் திருப்பதி சென்ற பிறகு ஒருநாள் கூட வக்கீல் உடையுடன் கண்டதில்லை. இல்லத்திலும் பெயர் 4.J GV Söð SF தொங்குவதைப் பார்த்ததுண்டு: அதில் * அட்வோகேட்” என்று எழுதப்பட்டதைப் பார்த்ததில்லை. இவர் நல்ல செல்வர்; சுகவாசி. இவர் சோதரர் டாக்டர் எஸ். பாஸ்கரன் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர். இவரும் மருத்துவத் தொழிலை நடத்துவதில்லை. மருத்துவத்துறை அல்லாத பாடத்தில் MDயோ M.Scயோ படித்தவராதலால் மருத்துவத் தொழில் நடத்தவில்லை என அறிந்தேன். என் மகன் டாக்டர் இராம கிருஷ்ணன் இவரிடம் பயின்றதுண்டு. இவன் திருமணம் திருச்சியில் தடைபெற்றது; திருப்பதியில் என் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி வைத்திருந்தேன். இதற்கு டாக்டர் பாஸ்கரன் வந்திருந்தபோது அவரிடம் எனக்கு அறிமுகம் ஆயிற்று.