பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுக் குமிழிகள்-4 பணியாற்றிய இடங்கள் முதலியவற்றை விசாரித்து அறிந்தார். என்னுடைய எழுத்துப் பணியையும் போற்றினார். யாரோ ஒருவர் - திரு. கே. பாலசுந்தர நாய்க்கர் என்று நினைக்கின்றேன் - நீங்கள் உயர்நிலைப் பள்ளியிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். தெரியாமல் துணைவேந்தர் தகுதியற்றவரைத் தேர்ந் தெடுத்துவிட்டார்' என்ற தவறான செய்தியையும் பரப்பி விட்டார். இப்போதுதான் உண்மை இன்னதென்று புரிந்தது ' என்றார். உடனே நான் சொன்னேன்; ! ஐயா, நீர்வளமும் நிலவளமும் உள்ள ஆற்றுப்படுகையில் விழும் விதைகளில் சில முளைத்தாலும் தரமான உயர்ந்த மரங்களாக வளர முடிவதில்லை; சூம்பிக் கிடக்கின்றன. வீட்டின் கட்டடங்கள், கோயில் கோப்புரங்கள், விமானங் கள், மதில்கள் இவற்றின் இடுக்குகளில் முளைக்கும் விதைகள் நன்றாக வளர்ந்து கட்டடங்களையே இடித்துத் தள்ளி விடுகின்றன. இங்ங்னமே படித்தவுடன் பலருடைய பரிந்துரையால் நேராகப் பல்கலைக் கழகத்தில் நுழைந்து விடுகின்றனர். தொடர்ந்து பதவி உயர்வுகளையும் பெற்று கொண்டும் வருகின்றனர். ஒய்வு பெறும் வரையில் படித்த அறிஞர் (Scholar) என்ற பெயருடன் திகழ்வதில்லை. ஆர வாரத்துடன் ஸ்கூட்டர், கார்களில் வருவது, நல்ல ஆடை கள் அணிவது, விருந்துகளில் கலந்து கொள்வது- இப்படி இவர்கள் வாழ்க்கை கழிந்து விடுகின்றது. பேராசிரியர்' என்ற பெயர் வழங்குகின்றது. கடித்த் தலைப்புத்தாள் களிலும் பேராசிரியர்' என்று அச்சிட்டுக் கொள்வதுடன் இவர் புலமை அடங்கி விடுகின்றது' என்றேன். இவர் மனத்தில் நன்கு பதிவதற்கு சில எடுத்துக் காட்டுகளையும் அடுக்கிக் காட்டினேன். பெரும் புகழுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்த ராகத் திகழ்ந்த திரு சீநிவாச சாஸ்திரி ஒர் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்தான். பல நூல்களின் ஆசிரியரும், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்