பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நினைவுக் குமிழிகள். 4 திரு. இராமய்யா இவ்வரலாற்றைக் கேட்டு அசந்து போய் விட்டார். பிறகு நான் அவரைப் பல்கலைக்கழக, வளாகத்திலும் அங்காடித் தெருவிலும், பிற இடங்களிலும் சந்திக்கும்போது மரியாதையுடன் பழகி வந்தார். நாளடைவில் எப்படியோ இவர் மனம் சிறிது நஞ்சு கொண்டதை அறிய முடிந்தது; பழகுவதில் மாற்றம் காணப்பட்டது. ஒரு சமயம் - 1970-க்கு மேல் - ஒரு நாள் ஒரு திருமணத்தில் அலர்மேல் மங்காபுரத்தில் சந்திக்க. நேரிட்டது. அப்போது டாக்டர் டி. சகந்நாதரெட்டி துணைவேந்தராக இருந்த காலம். பத்தாண்டுகள் எம். ஏ. கற்பித்த அநுபவம் இல்லையென்று - எனக்குப் பேராசிரியர் பதவி தராமல் என்னை அந்தரத்தில் வைத்தி ருந்த காலம். எப்படியோ திரு. இராமயய்யா ரெட்டி களின் மீது வளர்த்துக்கொண்ட வெறுப்பு துணை வேந்தர் சகந்நாத ரெட்டியின் மீது காட்ட வகையின்றி, என்னைக் "கிள்ளுக்கீரை' என நினைத்து, டாக்டர் சகந்நாத ரெட்டிக் காலத்தில் உங்கட்குப் பதவி உயர்வு வரா விட்டால் வேறு யார் காலத்தில் வரப்போகிறது?’ என்று கிண்டல் செய்யும் பாவனையில் பேசினார். டாக்டர் டி. சகந்நாதரெட்டி என்னைப் பல் வேறு' விதங்களில் கொடுமைப் படுத்திய காலம். இன்னொரு குமிழியில் இவை வெளிவரும். உடனே நான் திரு இராமய்யாவைப் பார்த்து 'ஐயா, துணைவேந்தர் ரெட்டி என்னை எவ்வளவு கொடுமைப் படுத்துகின்றார் என்பதை நீங்கள் அறியீர்கள். இவர் காலத்தில் நான் பேராசிரியராகப் போவதில்லை என்பது அங்கை நெல்லிக் கனி. நான் பேராசிரிய பதவி பெறுவதாக இருந்தால், அதை ஒரு நாயுடு துணைவேந்தர் மூலந்தான் ஏழுமலை யான் நல்குவான். அப்படி அப்பதவி எனக்கு வராவிடினும் நான் கவலைப்படுவன் அல்லன். நான் வந்தது பல்கலைக் கழகத்தில் தமிழ் வளர்ப்பதற்கு. தமிழக அரசு மானியம் பெற்று தமிழ் வளர்கிறது. பத்து மாணாக்கர்கள்