பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமய்யாவும் பாலசுந்தர நாயக்கரும் 43 எம். ஏ. பயில்கின்றனர். ஐவர் பிஎச். டிக்கு ஆய்கின்றனர். ஒருவர் பிஎச். டி. பட்டம் பெற்று விட்டார்: ஒருவர் பெறும் நிலையில் உள்ளார். இப்படியே வீட்டிற்குப் போவதற்கும் தயார். பேராசிரியர் பதவி எப்போது பெறுவது என்பது ஏழுமலையான் கையில் உள்ளது. உரிய சமயத்தில் பச்சைக் கொடி காட்டுவான். என்று உணர்ச்சியுடன் உருக்கமாகப் பேசி முடித்தேன். திரு இராமய்யாவுக்கும் ஏண்டா, இவரைச் சீண்டினோம்’ என்று ஆய்விட்டது. வாயை மூடிக் கொண்டு வாளா இருந்து விட்டார். நன் நள ஆண்டில் பிறந்தவன். நளன்' என்ற புனைவுத் திருநாமம் கொண்டவன். இதிகாச நளனைக் கலி ஏழரை யாண்டுகள் பற்றித் தொல்லைகளை விளை வித்தான் ஆனால், அந்தக் கலி' என்னை வாழ்க்கை முழுவதும் விடாது பற்றிக் கொண்டுள்ளான். நளனிடத் தில் கவி சேர்ந்த விதத்தைப் புகழேந்திப் புலவர், நாராய ணாய நமவென் றவனடியில் சேராரை வெந்துயரம் சேர்ந்தாற்போல்- பாராளும் கொற்றவனைப் பார்மடந்தை கோமானை வாய்மைநெறி கற்றவனைச் சேர்ந்தான் கவி, என்று காட்டுவர். என் பிராரப்த கருமமே (நுகர் வினையே) என்னை இவ்வாறு படுத்துகின்றது என்று எனக்குத் தோன்றுகின்றது. பிராரப்தத்தை (நுகர் வினையை) அதுபவித்தே தீரவேண்டும்; ஆண்டவனும் அதை அதுபவிக்கவைத்தே தீர்வான். சாணத்தில் புழு எப்படித் தோன்றுகின்றது? என்பதை நாம் அறிய முடியாது. அது போல எந்தச் சம்பந்தமும் இல்லாமல் எனக்குப் பகைவர்கள் முளைக்கின்றனர். எந்தச் சிறு நன்மை ஏற்பட்டாலும் அது ஆயுதப் பிரசவத்தால் 4. 'நள வெண்பா - கலிதொடர். 202.