பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமய்யாவும்.பாலசுந்தர நாயக்கரும்- 45 அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், மொழியியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் கே. குமாரசாமி ராஜா, தில்லிப் பல்கலைக் கழகத் தில் பணியாற்றும் திரு. பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரும் இந்தப் 8-இல் அடங்கியவர்கள் (இவர்கள். அப்பொழுது டாக்டர் பட்டம் பெறாதவர்கள்). நாங்கள் மூவரும் தேர்ந்தெடுத்த பட்டியலில் (Panel) இடம் பெற்றிருந்தோம். நானும் குழுவை நிரந்தரத் தன்மை துறைவளரும் வாய்ப்பு, தனியாகப் பணி, வீட்டு வசதிஇவை பற்றி வினாக்களை விடுத்தேன். துணைவேந்தர். தந்த மறு மொழியிலிருந்து எனக்குப் பதவி கிடைப்பது உறுதி என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. திரு கே , பாலசுந்தர நாய்க்கர் பேட்டிக்கு வரவில்லை. திருப்பதி சென்றதும் அவர் ஒய்வு பெற்றிருந்ததையும், விண்ணப்பிக்கத் தகுந்த அகவைத் தகுதி இல்லை என்பதையும் அறிந்தேன். நான்தான் தமிழ்த் துறையில் முதன் முதலாக நியமிக்கப் பெற்றவன். தேவஸ்தானத் தில் ஒய்வு பெற்ற பின் ஒரு மூன்றாண்டுகள் ஒப்பந்த நியமனம் பெறலாம் என்று முயன்றிருக்கலாம் எனத் தோன்றுகின்றது. ஏற்கெனவே இயங்கி வந்த நிரந்தர ஆசிரியர்கள் உள்ள துறையில் ஒய்வு பெற்ற ஒரு சிலரை நியமித்திருந்தமையால் திரு. நாயக்கருக்குச் சபலம்’ ஏற்பட்டிருக்க வேண்டும். வளரும் துறையாதலால் எடுத்த எடுப்பில் முதல் தனியாசிரியனாக போடுவதால், 6. ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு உதவி யாளராக இருந்தார். சென்ற ஆண்டு (1989) அவர் எங்கோ மறைந்தார். 7. எங்குப் பணியாற்றினார் என்பது நினைவு இல்லை. அணிக்கதிர்' என்ற அறிவியல் இதழ் ஒன்று நடத்தி வந்தார்.