பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-162 5. டாக்டர் உசேன் நயினார் இன்னொரு நிகழ்ச்சி உருதுத் துறை பற்றியது. சிறுபான்மையோர் (Minority) என்ற பெயரில் எத்தனையோ சலுகைகள் கிடைக்கின்றது.பல்கலைக்கழகம் தொடங்கிய காலத்திலேயே உருது, அறபு, பாரசீகம்’ என்ற ஒரு துறை ஏற்பட்டுவிட்டது. இளங்கலை வகுப்புகள் நடைபெற்ற காலத்தில் கூட மாணவர்கள் தலைகாட்ட வில்லை; எம். ஏ. வகுப்பிலும் இதே நிலைதான். தொடக் கத்தில் டாக்டர் அகமது என்ற ஒருவர் விரிவுரையாளராக நியமனம் பெற்றார். எம். ஏ. உள்ள துறையாதலால் ஏவலர் (Offic boy) என்ற ஒருவர் கூடப்பணியில் அமர்ந் தார். விரிவுரையாளர் கடிதங்களை உரிய இடங்களில் சேர்த்தல், பல்கலைக் கழகம், முதல்வர் அலுவலகம், போன்ற இடங்களிலிருந்து வரும் கடிதங்களை வாங்கி வைத்தல், வேறு குற்றேவல்களைச் செய்தல் போன்ற பணிகளை இவர் செய்வார். டாக்டர் அகமது வடநாட்டைச் சார்ந்தவர்; ஆஜ்மீர் நகரைச் சேர்ந்தவர் என்பதாக நினைவு. இவர் துறையை நன்முறையில் வளர்ப்பார் என்ற நம்பிக்கை துணைவேந்தருக்கு (பேராசிரியர் நாயுடு) இல்லை. ஆதலால் பேராசிரியர் முகம்மது உசேன் நயினார் என்ற ஒய்வு பெற்ற ஒருவர் பேராசிரியராக இரண்டாண்டு' ஒப்பந்தத்தில் வந்து சேர்ந்தார். இவர் இங்கு வந்து சேர்வதற்குமுன் டாக்டர் உமாயூன் கபீர் என்ற நடுவணரசு அமைச்சர் ஆதரவில் தில்லி மாநகரில் ஏதோ ஒரு பணியி லிருந்தார். தென்னகத்திற்கு வந்து விடவேண்டும் என்று