பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நினைவுக் குமிழிகள்-4 சோதனைகளும் அறிகுறிகளும் இதனை உறுதிப்படுத்தின. ஒரு சில மாதங்களில் நயினார் என்னைத் துக்கத்தில் ஆழ்த்தி விட்டு இறைவனடி சேர்ந்தார் . மறைவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தார். புன்முறுவல் எப்பொழுதும் இவர் இதழில் தவழ்ந்து கொண்டே இருக்கும். சுவையாக உரையாடுவதில் மிகவும் வல்லுநர். தாம் வாழ்க்கையில் பங்கு கொண்ட பல சுவையான நிகழ்ச்சிகளைச் சொல்விச் சொல்லி மகிழ்வார். இவர் மறைவதற்கு இ ன்டு வாரங்கட்கு முன்னர், மாவட்ட நீதிபதியாக (Distric: and Sessions Judge) @@5Ë$i g?ü6; GLI È so garristò மூத்த சகோதரர் வந்து போனார். இரு சகோதரர்களுக் கிடையே முப்பது ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை கூட இல்லை. அவ்வளவு பகை யுணர்ச்சி முற்றிய நிலை. இவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் பேராசிரியர் நயினார். அவர் திரும்பிப் புறப்பட்டதும் என்னிடம் சொன்னார்: 'ரெட்டியார் அவர்களே, முப்பது ஆண்டுகள் கழித்து இப்போது ஏன் வந்தார் தெரியுமா? நான் இறந்த பிறகு முஸ்லிம் சட்டப்படி இவருக்கு என் சொத்தில் ஒரு பங்குத்தொகை கிடைக்கும். அதை அளவிட்டுப் பார்ப்பதற்கு இங்கு வந்து போனாரே பன்றி உண்மையான அன்பினாலோ பாசத்தாலோ அல்ல’’ என்று புன்முறுவலுடன் சொன்னார். "துக்கச் சூழலையிலும் இவர் முகத்தில் புன்முறுவல் தவழும், இச்சமயத்தில் நயினார் அவர் கட்கு, சோர்வி னால் பொருள் வைத்ததுண் டாகில் சொல்லு சொல்லென்று சுற்றும் இருந்து ஆர்வி னாவிலும் வாய்திற வாதே அந்த காலம் அடைவதன் முன்னம்