பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று நூல்களின் வெளியீடு 57 பிஎச்.டி.க்குப் பதிவு செய்து கொள்வதற்கு நான் தொடர்ந்து முயன்று கொண்டுதான் இருந்தேன். அக்காலத்தில் ஆசிரியம், இலக்கியம், அறிவியல் துறைகளில் தரமான ஏழு நூல்களை வெளியிட்டிருந்தேன், திறனாய்வு, கல்வி உளவியல் துறைகளில் மூன்று நூல்கள் அச்சாகிக் கொண்டிருந்தன. திறனாய்வில் இரண்டு நூல் களை எழுதிக் கொண்டிருந்தேன். கல்வித் துறையில் பணி யாற்றிய இருபதாண்டுகள் அதுபவமும் பெற்றிருந்தேன். அக்காலத்தில் பி எச். டி பட்டம் பெற்றவர்கள் அரிய ராக இருந்தமையின் தரமான நூல்களை வெளியிட் டிருந்தவர்கட்கு துணைப் பேராசிரியர், பேராசிரியர், பதவிகள் வழங்கும் மரபும் நடைமுறையிலிருந்து வந்தது. பல்கலைக் கழக மானிய ஆணையமும் இந்த மரபுக்கு ஒப்புதல் அளித்தது, ஏன்? இந்தப் பல்கலைக் கழகத் திலேயே இம்மரபுக்குச் சான்றுகள் இருந்தன. இந்நிலை யில் எனக்குத் துணைப் பேராசிரியர் பதவியாவது வழங்கி யிருக்கலாம். என் உழைப்பை நான்கு ஆண்டுகள் நேரில் கவனித்திருந்தும் துணைவேந்தருக்கு மனம் இரங்க வில்லை வாங்கிய சம்பளத்திற்கே பாதுகாப்பு அளிக்கா தவர் பதவி உயர்வு எங்ங்னம் தரப்போகின்றார்? என் ளிைடம் நெருங்கிப் பழகிய பலதுறையைச் சார்ந்த பேராசிரியர்கள் , துணைப்பேராசிரியர்கள், விரிவுரை யாளர்கள் என் உழைப்பையும் வெளியீடுகளையும் நன்கு உணர்ந்து துணைவேத்தர் எனக்குத் துணைப்பேராசிரியர் பதவி தருவார் என்று சோதிடம் கூறினர். வாழ்க்கை முறைகளை நன்கு அறிந்த ஒரு சிலர் ' பி எச். டிக்குப் பதிவு செய்து கொள்ள இசைவும் வாங்கிய சம்பளத்திற்கு பாதுகாப்பும் அளிக்காத துணைவேந்தர் ரெட்டியாருக்கு எதுவும் தாரார்' என்று உறுதியாகக் கூறினர். பலிஜ வகுப்பைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் 'இத்தனை யும் கிடைக்கும்; இதற்கு மேலும் கிடைக்கும்” என்று சில குறும்புக்காரர்கள் பேசிக் கொண்டதும் என் காதில்