பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-164 8. முத்தொள்ளாயிர விளக்கம்-முகிழ்த்தல் முதல் சந்திப்பில் திரு எஸ். கோவிந்தராஜுலு நாயுடு துணைவேந்தர் தந்த அறிவுரை என் உள்ளத்தில் ஆழப் பதிந்தது. அவர் தந்த அறிவுரை என் இயல்புக்கு ஒத்த தாக இருந்தமையால் அஃது என்னோடு ஒன்றி ஐக்கியமாகி விட்டது. ஒய்வு நேரத்தில் திருவேங்கடவன் கீழ்த்திசை ஆய்வுக் கழக நூலகத்திற்குச் சென்று அங்குள்ள தமிழ் நூல்களையும் பிறவற்றையும் பார்வையிட்டேன். அதிக ஒய்வு இருந்தமையால் அடிக்கடிச் சென்று நூல்களைச் சோதித்தேன். "முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் (108): என்ற தலைப்பில் பேராசிரியர் மு. இராகவய்யங்காரால் பரிசோதிக்கப்பட்டுச் செந்தமிழ்ப் பிரசுரம்-14 ஆக வெளி வந்த (இரண்டாம் பதிப்பு-1935) என்ற சிறு நூலொன்று என் கண்ணில் பட்டது. என்னையும் கவர்ந்தது. உடனே அதனை இரவலாக வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். ஏற்கெனவே நான் காரைக்குடியிலிருந்த போதே கம்பன் அடிப் பொடியின்' நட்டால் முத்தொள்ளாயிரம்டி.கே.சி. பதிப்பில் (பொதிகைமலைப் பதிப்பு-திருக் குற்றாலம்-தென்காசி (1957) எனக்குப் பயிற்சி இருந்தது. காரை க் கு டி யி லி ரு ந் த போதே அந்தப் பாடல்களை நன்கு சுவைத்திருந்தேன். பாடல்களின் நாடி பிடித்துப் பார்க்கும் டி. கே. சி.யின் இயல்பை நன்கு புரிந்து கொண்டிருந்தேன். குடும்பம் இல்லாமல் திருப்பதியில் தனிக் கட்டையாக' இருந்ததால்(ஆறு ஆண்டுகள் நேரம் எல்லாம்படிப்பதிலும்) 1. திரு சா. கணேசன். (தேசபக்தர்)