பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நினைவுக் குமிழிகள்-சி எழுதுவதிலுமே கழிய வேண்டியிருந்தது. முத்தொள் ளாயிரப் பாடல்களை அசைப்போட்டு அசை போட்டு: மெல்லச் சுவைத்தேன். 'முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒவ்வொன்றிலும் வெகு அற்புதமான உணர்ச்சி பாவங் களைப் பார்க்கலாம். உணர்ச்சியானது அரிய தமிழ்ப் பண்போடும் தாளப் பண்போடும் உருவெடுக்கப் பார்க்க லாம். எவ்வளவுக் கெவ்வளவு உணர்ச்சி பாவத்தோடு நம்முடைய இதயம் ஒட்டுகின்றதோ அவ்வளவுக் கவ்வளவு கவி உருவத்திலுள்ள அழகும் சுவையும் அற்புத மும் நமக்கு விளங்கும்'... ஆனால் கவியில் முக்கிய மாகக் கவனிக்க வேண்டியது உணர்ச்சியானது பாவ உருவத்தில் வந்து வெளிப்படுகின்றதா என்பதுதான் இந்த உருவத்தின் மூலமாகவே, கவிஞருடைய உள்ளத்தில் எழும் உணர்ச்சியைப் பார்க்கின்றோம். அதோடு, அந்த உணர்ச்சியை வார்த்தை தாளங்களிலுள்ள நேரான, இயல்பான சம்பந்தத்தில் பார்க்கின்றோம். அப்படிப் பார்க்கும் போதுதான் கவிஞரது இதயத்திலுள்ள அற்புத மான சிருஷ்டி தத்துவம் நம்முடைய இதயத்துக்கும் வந்து சேருகிறது. கவிஞருடைய சிருஷ்டி தத்துவத்தால், கவிஞர் இதயத்தில் பெருகிய ஆனந்தம் அவ்வளவிலும், நாமும் பங்கு கொள்கின்றோம். முத்தொள்ளாயிர ஆசிரியர் இரண்டாயிர வருஷத்துக்கு முன் அடைந்த ஆனந்தத்தை இன்று நம்முடைய இதயம் அடைகின்றது. நமது பாக்கியந் தான் என்ன!” இந்தக் குறிப்பு என் உள்ளத்தை ஆட் கொண்டது: பிணித்துவிட்டது. முத்தொள்ளாயிரப் பாடல்களைச் சுவைத்து மகிழும் போது-பரவசப் படும்போது-இந்த அநுபவம் எனக்குத் தட்டுப்பட்டது.துணைவேந்தர் தந்த உற்சாகத்தால் பாடல் 2 முத்தொள்ளாயிரம்-டி. கே. சி. யின் முகவுரை பக், ik. (பதிப்பு-1957). 3 டிெ-பக் (xi),