பக்கம்:நினைவுச்சரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{} நினைவுச்

அவர் ஈளிச்சேரில் சுகமாகச் சாய்ந்துகொண்டு, வீட்டின் சுவர்களே பார்த்தார். மேல் முகட்டிலே, விட்டத்தில், கட்டை களில் எல்லாம் கண்களே மேயவிட்டார். கதவுகளே, நிலைகளேக், கவனித்தார்.

-அப்பா கட்டிப்போட்டது. அப்பா மட்டும் இந்த ஊரிலே ஒரு வீட்டைக்கட்டிவச்சு, இரண்டு மூணு வயல் களேயும் வாங்கிப் போடாமல் இருந்திருந்தால், இது நம்ம ஊரு என்கிற பிடிப்பு எனக்கு எங்கேயிருந்து வரும்? நம்ம சொந்த ஊரு என்கிற எண்ணம் மனுஷனுக்கு ஒரு பிடிப்பை உண்டாக் கத்தான் செய்யுது. என்ன சொந்தம்? எது சொந்தம்? சொந்த ஊரு என்கிறதிலே ஏதாவது அர்த்தம் இருக்குதா? ஆலுைம், இந்த வார்த்தையிலே, அது உணர்த்தும் இடத்திலே, ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கத்தான் செய்யுது. உங்களுக்கு எந்த ஊரு என்று கேட்கிறவங்ககிட்டே, திருநெல் வேலியின்னு சொல்ருேம். அது எல்லாருக்கும் தெரிஞ்ச ஊரு; சுலபமாத் தெரிஞ்சுக்கிடும் என்பதுனுலே. ஆன கேக்கிறவங் களிலே சிலபேரு கிண்டலா எண்ணுவதும் இயல்பாயிருக்கு.

-ஒரு சமயம் ரெண்டு பேரு பேசிக்கொண்டது என் காதிலும் விழுந்துது. தெக்கேயிருந்து வாறவங்ககிட்டே எந்த ஊருன்னு கேட்டுப்பாரு. திருநெவேலின்னு மதிப்பாச் சொல்லுவாங்க. அவங்களுக்கு உண்மையிலே திருநெவேலிப் பக்கம் ஏதாவது பட்டிக்காடாக இருக்கும். இருந்தாலும் ஜம்பமா நமக்குச் சொந்த ஊரு திருநெவேலி என்பாங்க. அல்லது திருநெவேலி லைடு-திருநெவேலிப்பக்கம்-என்று சொல்லுவாங்க பின்னு பரிகாசத்தொனிலே பேசிக்கிட்டாங்க.

-ஏய், ஏன் அப்படிச் சொல்லவேண்டியிருக்கு என் கிறதை நீ கொஞ்சம் யோசிக்கணும். உனக்கு எந்த ஊருன்னு கேட்கிறே. சிவபுரம்னு சொல்றேன்னு வையி. உனக்கு ೯ ಐr விளங்கிடப்போவுது? திருதிருன்னு முழிப்பே. அல்லது, சிவபுரமா! அது எங்கேயிருக்குன்னு கேட்கப்போறே. திருநெவேலிப் பக்கம்னு தானே சொல்லனும், சரி, கொஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/10&oldid=589250" இலிருந்து மீள்விக்கப்பட்டது