பக்கம்:நினைவுச்சரம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

安痺y 101

9

ஏ செதம்பரம், பீக்காக்-ரைடர் (PEACCCK-RIDER) இந்த ஊரிலேயே பலமா டேரா போட்டு விட்டாப் போ லிருக்கே!”

இனிமே அவரு இந்த ஊரிலேயே தான் இருக்கப்போரு ராம்டா..?

'ஏனும்??

'அவர் கிட்டேப் போய் கேளு! பிறந்த ஊரு, சொந்த வீடு, கடைசி காலத்திலே நிம்மதியா இருக்கலாமேன்னு வந்திருப்பாரு.’

ஆமா, ஏன்டே அவரு இந்த ஊரைவிட்டுப் போனுராம்? ஏன் இந்த ஊரை எட்டிப் பார்க்காமல் இருந்தாராம்?)

இவை எல்லாம் பீக்காக் ரைடரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள், என்கிட்டே கேட்டால்??

தெருவோடுபோன் இரண்டு பையன்கள்பேசிக்கொண்டே நடந்தார்கள். மயிலேறும் பெருமாள் பிள்ளே விட்டுக்குள் இருப்பார்; தூங்கிக் கிடப்பார்; அவர் காதில் விழாது என்ற தைரியத்தில் சத்தம் போட்டுப் பேசியபடி நடந்த அவர்கள் எட்டச்சென்று விட்டதால், மேற்கொண்டு அவர்கள் பேசி யிருக்கக் கூடியது எதுவும், வீட்டின் முன் அறையில் கட்டிலில் துரங்காமல் படுத்திருந்த பெரிய பிள்ளேயின் காதுகளேத் தொட வில்லே.

அப்போது பிற்பகல் மூன்று மணி. பள்ளிக்கூடம் விட்டிருக்கக்கூடிய நேரம் இல்லே. என்ருலும், பள்ளிக்கூடம் போன பயல்களில் இரண்டு பேர்தான் திரும்பி வந்திருந் தார்கள். யார் வீட்டுப் பையன்கள் என்பது அவருக்குத் தெரியாது. மூத்தவனுக? யாரு என்று அறியும் அவாவோடு அவர் வெளியே வந்து எட்டிப் பார்க்கையில், அவ்விருவரும் கீழ்த்தெருவுக்குப் பக்கம் போவது தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/101&oldid=589345" இலிருந்து மீள்விக்கப்பட்டது