பக்கம்:நினைவுச்சரம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் ! { }

"நான் மெட்ரிகுலேஷன் வரை வயல் காட்டுப் பள்ளிக் கூடத்திலே தான் படிச்சேன். இங்கிருந்து போய் வந்து தான். முதல்லே வீராவரம் ரயிலடிப் பள்ளிக்கூடத்திலே தான் படிச்சுக்கிட்டிருந்தோம். எட்டாவது வகுப்பை எட்டி யதுமே வால்தனம் பண்ண ஆரம்பிச்சிட்டோம். நானும் இந்த ஊரிலேயிருந்து போற பையன்களும் தான். வகுப்பு நேரத்திலே வெளியே வந்து மாமரத்திலே கல்லு வீசி மாங்கா அடிக்கிறது...அப்போ அங்கே சுற்று வட்டாரத்திலே, மாந்தோப்புகள் நிறைய இருந்துது...இப்படி ஏதாவது பண்றது. தமிழ் ஐயா அருமையான சைவப் பழம். அவதை கிண்டல் பண்ணனும்னு திட்டமிட்டோம். அவரு வழக்கமா ஒரு பையனே அனுப்பி மூக்குப் பொடி வாங்கி வரச் சொல்லு: வாரு ஒரு நா நாங்க என்ன செய்தோம் தெரியுமா? ஒரு குருவிக் குஞ்சை புடிச்சுக் கொன்னு, அதை கல்லு வச்சுத் தட்டி சதசதன்னு ஆகும்படி பண்ணிகுேம். பொடி மட்டை யிலே இருந்த பொடியை கீழே தட்டிட்டு, கொஞ்சம் போல பொடியோட இந்தக் குருவிக் குஞ்சையும் சேர்த்துப் பிசைஞ்சு வச்சோம். அருமையா, கடைக்காரன் மட்டையை மடிச்சுக் கட்டிக் கொடுக்கிற மாதிரி, அந்தப் பையனிடம் கொடுத்து அனுப்பினுேம். நாங்க கிளாசுக்குப் போனப்புறம் அவனே வரச் சொன்னுேம். அவனும் அப்படியே செய்தான். தமிழ் ஐயா பொடி மட்டையை கையிலே வாங்கியதும், இன்னக்கு தடியாவும் கனமாவும் இருக்குதே ; பொடி நிறைய இருக்கும் போல் தெரியது; இன்னிக்கு கடையிலே யாருடன் இருந்தாங்க என்று சொல்லிக்கிட்டு,பொடியை சிம்டாவா எடுக்கிறதுக்காக, பெருவிரலேயும் இன்னுெரு விரலேயும் சேர்த்து மட்டைக்குள்ளே விட்டாரு விரல்களிலே ஈரமா சதசதன்னு ஏதோ படவும், எலேய் என்னதுடாயிதுன்னு வெளியே இழுத்துப் பார்த் தாரா? ரத்தமும் சதையுமா கூழு மாதிரி ஆகிப்போன குருவிக் குஞ்சு! அப்பா-முருகா-ஞானபண்டிதான்னு புலம்பிக்கிட்டு அதை கீழே போட்டாரு. அவருக்குக் கோபமாகுக் கோபம்: டேய்,எந்தப் பயடா இந்த வேலை செய்யச் சொன்னது? உள். ளதை சொல்லிப் போடு, இல்லேன்ன உன் முதுகுத் தோலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/111&oldid=589355" இலிருந்து மீள்விக்கப்பட்டது