பக்கம்:நினைவுச்சரம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# #2 நினைவுக்

r o

உறிச்சுப்போடுவேன்னு கத்தி, அந்தப் பையனை அடிச்சாரு. அவன்

நடத்ததை சொல்லிட்டான். எங்களுக்கும் பூசை

அதோடு போகலியே! ஒரு பயலுக்கு தியாரு மேலே ஆத்திரம். பாவி மனுசன் விரல்களாலே சதையை புடிச்சு நிமிட்டாம் ம் கொடுப்பாகு பார்க்கனும்.--ரெண்டு நாளேக்கு அந்த இடத்திலே எரிச்சல் இருந்துக்கிட்டே இருக்கும். பெரம்பை

வச்சு லொட்டு லொட்டுன்னு அடிச்சுக்கிட்டே இருப்பாரு.

வயித்திலிங்கம் பிள்ளே சாகாரா-எங்க வயித்தெரிச்சல் தீராதா! கணக்கு வாத்தியான் சாகானு, எங்க மனக்குறை எல்லாம் தீராதான்னு நாங்க, ஸ்கூல் முடிஞ்சதும், வெளியே வந்ததும் பாட்டு மாதிரி ராகம் போட்டு நீட்டி முழக்குவோம். ஒருநாள் ப்பாற்கடல் நம்பி இங்கிற அந்தப் பையனே அவரு உரி உசின்னு உரிச்சிட்டாரு. அவன் அவரை பழிவாங்கத் திட்டம் போட்டான். ஊமத்தங்காயை சாணியிலே பொதிஞ்சு பதுக்கி வச்சிருந்தான். வயித்திலிங்கம் பிள்ளே வரும்போது அவரு முதுகுமேலே ஓங்கி வீசினன். சாணி தெறிச்சு விலகி விழுந்திட்டது. முள்ளுமுள்ளா இருக்கிற ஊமத்தங்கா கேசட் த்திக்கிட்டு நின்னுது. அவரு பையனே இனம் கண்டுக்கிட்டாரு. இப்படி ரிப்போர்ட்டுகள் ஹெட்மாஸ்டரிடம் போச்சு. அவரு சிவபுரம் பையன்கள் போக்கிரிப் பயல்கள்; நம்ம பள்ளிக்க உத்துக்கு லாயக்கில்லேன்னு சொல்வி பெற்ருேருக்கு தெரிவிச்சுப் போட்டாரு. எல்லாருக்கும் டிரான்ஸ்பர் லர்டிபேகட் தாறேன் ; அதுக்கு இஷ்டமில் ன்கு பெயரை அடிச்சிருதேன்; இந்தப் பையனுக எங்க சிக்கூடத்துக்கு வேண்டாம்னு ஒரே வெறைப்பா நின்னுட் டாரு. அவ்வளவுதான். சில பையனுக படிச்சது போ தும்னு ஊரோடு இருந்திட்டானுக. ஒன்றிரண்டு பேரு பாளே யங் கோட்டைக்குப் போயி படிச்சிட்டு வந்தானுக. நானும் இன்னும் ரெண்டு பேரும் வயக்காட்டுப் பள்ளிக்கூடத்துக்குப் போகுேம்...எதுக்காகச் சொல்ல வந்தேன் குனு, பள்ளிக்கூடப் பருவத்திலே பையன்கள் பொறுப்பற்ற தனமா குறும்புகள் சேட்டைகள் பண்றது சகஜம் தான்கிறதுக்காகத் தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/112&oldid=589356" இலிருந்து மீள்விக்கப்பட்டது