பக்கம்:நினைவுச்சரம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்ப படிப்பையும் நாங்க விட்றலே. ஆகு, இப்போ படிப்பு முக்கியமல்ல, சேட்டையும் கல்லுளிமங்கத்தனமும் தான்

முக்கியம் என்ருயிட்டு து:

  • . த

ஆமா. நீங்க தினம் இங்கேயிருந்து எப்படி போய் வந்தீங்க?’ என்று ஒருவர் விசாரித்தார்.

‘ரயிலிலே தான். வீட்டிலேயிருந்து ஸ்டேஷனுக்கு ரெண்டு மைல் நடை. கொஞ்ச தூரம் வயல்கள் வழியாகவே நடந்து, அங்கே முக்குலே போய் குள்த்தங்கரை ரஸ்தாவை பிடிப்போம் சிலசமயம். ரஸ்தா வழிய சுற்றியும் போவோம். ரயில் காலே ஏழரை மணிக்கு. வீட்டிலேயிருந்து ஆறாை மணிக்கே புறப்பட்டாகணும். பத்து மணிக்குத் தான் ஸ்கூல் ஆரம்பம். அங்கே எட்டு மணியிலேயிருந்து குட்டப்புழுதி :பண்ண ரெண்டு மணி நேரம் இருந்தது. அப்புறம் சாயங் காலம் ஆறு மணிக்குத்தான் ரயிலு. ஆறேகாலுக்கு தாழை, யூத்திலே வந்து இறங்குவோம். அங்கேயிருந்து நடந்து வீட்டுக்கு வாறதுக்குள்ளே இருட்டிவிடும். மழை காலத்திலே ரொம்பக் கஷ்டம். வந்ததும், வீட்டிலே இருக்கிற ஆறிப் போன சாப்பாட்டை வாயிலே போட்டுக்கிட்டதும், நீட்டி நிமிரலாம்னு தான் தோணும். படிப்பிலே கவனம் செல்லாது. இருந்தாலும் எப்படியோ படிச்சு பாஸ் பண்ணி னுேம்னு வையுங்க. இப்ப ரொம்ப வசதியா ஒரு மணிக்கு ஒரு பஸ் ஓடுது. தாழையூத்திலேயே ஹைஸ்கூலும் இருக்கு” என்று மனு, பெனு தெரிவித்தார்.

முற்காலத்திய படிப்பு முறைகளே ப் பற்றி பேச்சு சுற்றியது, படிக்க வைக்கிறது’ என்பதை தடபுடல் விசேஷ் மாகக் கொண்டாடி, ஆவல் பொரி கடலேயை தாராளமாக வழங்குவது; அண்ணுவி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி ஆரம்பிப்பது; தரையில் மணலே பரப்பி அதன்மீது விரலால் அழுத்தி எழுதி எழுத்துக்களே கற்றுக்கொண்டது; ( கை விர லிலே தோல் உரிஞ்சு போகும். எரியும்: ; படிக்காமல், பள்ளிக்கூடத்துக்கு வராமல் ஏய்க்கிற பையன் காலில் தடிக் கட்டையை சங்கிலியால் மாட்டி வைத்து (கோதண்டம்?)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/113&oldid=589357" இலிருந்து மீள்விக்கப்பட்டது