பக்கம்:நினைவுச்சரம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; ; Ś - நினைவுச்

மூலப் பொருள்களும் மனித உழைப்பும் மிக - ഥിഖ് கிடைத்துக் கொண்டிருந்த ஒரு காலத்திலே கட்டப்பட்டவை ുങ്ങി ഒ്.

அந்தக் காலத்தில் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் செலவில் உருவான அந்த வீடுகள் போன்ற கட்டிடங்களே இந்தக் காலத்தில் பல பத்தாயிரங்கள் செலவழித்தாலும் கட்டி முடிக்க முடியாது என்று, இன்று பார்க்கிறவர்கள் பிரமிக்கும் வகையில், அவை வசதியான அமைப்பும் மிடுக்கான தோற்றமும் கொண்டு ஊருக்கே ஒரு பெருமை அளிக்கின்றன. என்ருலும், அந்த ஊரில் அவற்றுக்கு வாடகை மதிப்பு இல்லே. ஏழு ரூபாய்க்கும் எட்டு ரூபாய்க்கும் வீடு வாடகைக்குக் கிடைக்குமா என்று அலேயும் வெளியூர்காரர்கள் பத்து ரூபாய், பதினேந்து ரூபாய் தர மனம் கூசி அநியாய வாடகை என்று

துணுமுணுப்பது ஊர் நியதியாக அமைந்து விட்டது.

முப்பாட்டஞர்கள் தேடி வைத்த சொத்து பலத்தில் பாட்டன்மார்களும் அப்பாமார்களும் ஊரோடு இருந்து, வேலே எதுவும் செய்யாமலே, சுகTவனம் என்பதை பெருமைக் குரிய ஒரு தொழில் போல் அறிவித்துக் கொண்டு காலம் கழிக்க முற்பட்ட போது, முன்னுள்ளோர். பயிலாத கல்யாண குணங்களே கற்று, உல்லாச வாழ்வு நடத்தியதன் விளேவாக நடுத்தர வர்க்கத்துப் பிள்ளே மார்களின் சொத்தும் சுகமும் தேய்ந்து கரைவது தவிர்க்க முடியாத நிகழ்வு ஆயிற்று.

விலே உயர்ந்த நைஸ் வேண்டிகள், அருமையான சில்க் துணியாலான சட்டைகள், கிரீச்சிடும் உயர் ரகச் செருப்புகள், i.வுனுக்குப் போய் வர வில் வண்டி, அதற்கு ஏற்ற அருமை யான ஜாதி மாடுகள், ஒட்டலிலும் லாலா கடைகளிலும் தயாராகும் தின்பண்ட தினுசுகள், உற்சாகமூட்ட தாசி உறவுகள் என்று மைனர் வாழ்வு வாழக் கற்றுக் கொண்ட வர்கள் கையில் சொத்து எத்தனே காலத்துக்கு நிலைத்து

நிற்கும் ? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/116&oldid=589360" இலிருந்து மீள்விக்கப்பட்டது