பக்கம்:நினைவுச்சரம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் { 19

சிவபுரத்தில் விதவைகளும், வாழாவெட்டிகளும், அதிகம்

என்று சொல்லப் படவேண்டிய அளவுக்கு இருந்தார்கள்.

சிவபுரம் பெண்களுக்கு வாய் அதிகம், தான் என்ற அகம்பாவம் ஜாஸ்தி, புருஷனே மாமியாரை மதித்து, பணி வாக அடங்கி ஒடுங்கி நடக்கும் சுபாவம் குறைவு. எனவே, புருஷைேடு வாழாது பிறந்த வீட்டுக்கே வந்து சுதந்திரமாக வாழ்ந்து, வாழாவெட்டி என்று பட்டம் சூட்டிக் கொள்வது அவ்வூர் பெண்களுக்கு-அல்லது, பெண்களில் பலருக்குஒரு பிறப்புரிமை மாதிரி ஆகியிருந்தது.

அவ்வூராரின் கபாவப்படி, அவர்காேப் பற்றி சுவராஸ்ய மான காதல்-காமக் கதைகள் கட்டிவிடப்படுவதும் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகவே விளங்கி வந்தது.

ஆயினும், அது பற்றிக் கவலை எதுவும் கொள்ளாத, வாழ முடியாமல் போன வாழ்வரசிகளும், இல்லற இன்ப வாழ்க்கையை இழந்துவிட்ட முன்னுள் வாவரசி "களும் {இன்றைய விதவைகளும் தங்கள் மன அரிப்பையும் உணர்ச்சித் தினவையும் சொறிந்து விட்டு சுகம் பெறும் முயற்சியாகத்தானே என்னவோ, ஊரில் உள்ள ஒவ்வொரு வரையும் பற்றி, அவள் இவனே வச்சுக்கிட்டிருக்கா அவன் இவளோடு போனுன் இன்னவனுக்கும் இன்னவளுக்கும் தொடர்பு’ என்ற ரீதியில் சுவாரஸ்யமாகப் பேசி மகிழ்வதை ஒரு வாழ்க்கை முறையாகவே ஆக்கிக்கொண்டு விட்டார்கள்.

அதற்கு அவர்களுக்கு பொழுதும் நிறைய இருந்தது. பொதுவாக, மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு தரையிலே செத்த நேரம் உடம்மை கெடத்தி இருப்போமே? என்ற தூண்டுதல்ே தருகிற சோம்பல் உபாசனப் பொழுதும், தூங்கு வதற்கு என்று ஏற்பட்ட ராத்திரிகளில் துக்கம் வராமல் விழித்துக் கொண்டிருக்கிற பெரும் பொழுதுகளும் அவர்களது கற்பனேக்கும் பேச்சாற்றலுக்கும் பெரிதும் துணே புரிந்தன.

ஒரு கிளேப் பறவைகள் என்று சொல்லப்படவேண்டிய, அவர்களேப் போன்ற அக்காள்களும் சித்திகளும் மதனிகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/119&oldid=589363" இலிருந்து மீள்விக்கப்பட்டது