பக்கம்:நினைவுச்சரம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ః தினேவுக்

சொல்ல முடியும்? வயல்காரனுக்கு எவ்வளவு வயித்தெரிச்சல் இராது? திரும்ப அவன் கிழங்குகள் பயிரிடனுமின்னு ஆசைப் படுவான ? அவனுக்கு நேர்ந்ததுதானே நமக்குமின்னுதானே அக்கம் பக்கத்து வயல்காரனும் சும்மா இருந்திருவான்? இந்த கரிலே ஒத்துமை போதாது அண்ணுச்சி. ஒரு கட்டுப்பாடு கிடையாது. அவன் அவனுக்கு வந்ததை அவன் அவன் அனுபவிக்க வேண்டியதான் ; நமக்கென்ன என்று ஒவ் வொருவரும் நினைப்பதனுலே, ஊரு நிலமையே மோசமாப் போச்சு 1’ என்று மூக்கால் அழுதுவைத்தார் பிறவியாபிள்ளே, தனது இயல்பின்படி,

சிவபுரத்துக்கு வந்து சேர்ந்து இருபது நாட்கள் ஆச்சு. நான் இன்னும் பாளேயங்கோட்டை, ஜங்ஷன், திருநெல்வேலி பக்கமே போகலியே இது பெரிய குறைதான் என்று எண்ணிக்கொண்ட மயிலேறும் பெருமாள் பிள்ளே திடீரென்று கிளம்பிவிட்டார்.

  • ஊர்களே பார்த்த மாதிரியும் இருக்கும். தேவையான சாமான்களே வாங்கின மாதிரியும் ஆச்சு என்று தனது பிரயாணத்துக்கு ஒரு நோக்கமும் கற்பித்துக் கொண்டார் ஆவர். .

தனது வாழ்விலேயே முதல் முறையாக பாளையங் கோட்டை திருநெல்வேலி வட்டாரத்தை, விழிப்பு உணர் வோடு, ஒரு பட்டணப் பிரவேசம் மாதிரி, சுற்றிப் பார்த்தது. அவர் நினேவில் பசுமையாய் கிடந்தது.

அப்போது மயிலேறுவுக்கு வயது ஆறு. அவனுடைய பெரியப்பா மகனை பெரிய அண்ணுச்சி ஒருவர் மாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/128&oldid=589372" இலிருந்து மீள்விக்கப்பட்டது