பக்கம்:நினைவுச்சரம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் து

டாக்டர் ஆக இருந்தார். வெளியூரில் பல இடங்களின் பணி புரிந்து விட்டு, வீராவரம் மாட்டு ஆஸ்பத்திரிக்கு டாக்டராக வந்திருந்தார். வசதியான இடம், ஆஸ்பத்தினி காம்பவுண்டிலேயே செளகரியமான வீடு டாக்டருக்: அவரை பார்ப்பதற்காக மயிலேறுவின் அப்பா, மகனேயும் கூட்டிக்கொண்டு அங்கே போனுர். டாக்டரின் குழந்தைகள். இரண்டு பேர், மயிலேறு, இன்னும் இரண்டு பிள்ாேகன் எல்லோருக்கும் பட்டனப் பிரவேசம் தடத்தத் திட்ட மிட்டார் டாக்டர் அண்ணுச்சி. ஆஸ்பத்திரியை சேர்ந்தது தானே, அல்லது டாக்டருக்குத் தெரிந்த பிரமுகர் எவருடை தோ, அல்லது வாடகைக்குப் பேசப்பட்டது தானுே-அது மயிலேறுவுக்கு ஞாபகயில்லே. அருமையான இரண்டு வெள்ளேக்குதிரைகள் பூட்டப்பெற்ற ஃபீட்டன் வண்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்தக் காலத்தில் பிளஷர் கார்கள் அபூர்வமாகச் சில பேரிடம்தான் இருந்தன. பஸ்களும் ஒரு சிலதான் ஒடின. கல்யாண வீடுகள், விசேஷ நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ரெட்டைக் குதிரை சாரட்டு தான் முக்கியமாகவும் மதிப் புக்கு உரிய விஷயமாகவும் விளங்கியது. சின்னப் பிள்னே களுக்கு குஷியூட்டுவதற்காக அப்படி ஒரு வண்டியையே கொண்டுவர ஏற்பாடு செய்தார் டாக்டர் ஆண்ணுச்சி.

முதலில் திருநெல்வேலி போய், ரதவீதிகளே கற்றிவிட்டு

வந்து, நேரே பாளையங்கோட்டை போக வேண்டியது ; அங்கே பஜாரில் ஏதாவது தின்பண்டம் 1 மில்க் சாக்லேட்டு

தான் நல்லது வாங்கிக் கொடுத்து, ஹைகிரவுண்ட் வள்ை போய் விட்டு திரும்பி வந்து சேரவேண்டும் என்று திட்டம் வகுத்து, ஒரு வேலைக்காரனேயும் துணைக்கு அனுப்பினுர்,

அப்படியே நடந்தது. ஃபீட்டன் சவாரியும் புதிய இடங்களே கண்டுகளிக்கும் வாய்ப்பும் சிறுவன் மயிலேறுவுக்கு அதிக உற்சாகமும் கிளுகிளுப்பும் ஊட்டின. அந்தப் புதுமை அனுபவம் ஆனந்தமாக அவன் உள்ளத்தில் பதித்து விட்டது. . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/129&oldid=589373" இலிருந்து மீள்விக்கப்பட்டது