பக்கம்:நினைவுச்சரம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哥剪阻拉 137

திேைல, அவருக்கு ஹாரன் சக்கிரவர்த்தி அருணசலம்னு பேரு ஏற்பட்டுட்டுது. ஒவ்வொரு ட்ரிப்பிலும் அட்டகாசமா இப்படி ஹாரன் பண்ணிக்கிட்டே போனதை இன்ஸ்பெக்டர் சாந்தப்பபிள்ளே கவனிச்சுக்கிட்டே யிருந்தாரு என்று சொல்லிவந்தவர், சவுக்கடி சாந்தப்பபிள்ளையை உமக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்.

கேள்விப்பட்டிருக்கேன். அவ்வளவுதான் என்ருர் பாவன்னு.

  • ஸர்க்கிள் இன்ஸ்பெக்டர் சாந்தப்பபிள்ளே பெரிய ஆளு. ரொம்பக் கண்டிப்பானவர். நேர்மையான மனுஷன், ஒழுக்கம் நேர்மை நியாயம் இவை எல்ல்ாம் வாழ்க்கையிலே அமுல் நடத்தப்படவேனும் என்ற கொள்கை உடையவர். அந்தக் காலத்திலே இங்கே போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்ட ராக இருந்தாரு அப்போ அவங்க அதிகாரமும் ஆளு. செல்வாக்கும் ரொம்ப மேலோங்கியிருந்த காலம். பொதுவா சர்க்கார் உத்தியோகஸ்தர்களே பத்திச் சொல்றேன். பவரும் பலமும் உள்ளவங்க என்ன வேனும் லுைம் துணிஞ்சு செய்ய லாம் என்று இருந்த காலம். ஆ ைசாந்தப்பபிள்ளை அதை நேர்மை நியாயம் ஒழுக்கத்துக்காகப் பயன்படுத்தினரு” என்று அவரைப்பற்றி புகழ்ந்து பேசலாஞர் மன. பெளு.

சாந்தப்பபிள்ளே எப்போதும் மோட்டார் பைக்கிலேயே பாளேயங்கோட்டைக்கும் திருநெவேலிக்கும் சுற்றித் திரி வார். அவர் கையில் எப்போதும் சவுக்கு இருக்கும். ரோடில் எவன் தவறு செய்தாலும், சவுக்கால் சுளிரென்று ஒரு அறை கொடுத்துவிடுவார். வண்டி ராங்ஸ்ைடில்ே போனல், சைக் கிளில் ஸ்பீடாகப் போனுல்-இப்படி என்ன குற்றம் என்ருலும், அவர் சவுக்காலடித்து உணர்த்துவார். வாய்க்காலில், பெண் கள் குளிக்கும் படித்துறை அருகே ஆண்கள் வேட்டியோ துண்டோ கட்டிக்கொள்ளாது கோவணம் மட்டும் கட்டிக் கொண்டு கரைமீதோ, தண்ணிரிலோ நின்ருல், அதை சாந்தப்பபிள்ளை பார்த்துவிட்டால், சவுக்காலடித்துத் திருத்து வார். பொம்பிளைக குளிக்கிற இடத்திலே ஆம்பிளேக இப்படி

9 - ليَز بـ 108 سني

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/137&oldid=589381" இலிருந்து மீள்விக்கப்பட்டது