பக்கம்:நினைவுச்சரம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 நினைவுச்

நிற்கக்கூடாது. வேட்டி அல்லது துண்டு கட்டிக்கிட்டுத்தான் குளிக்கனும் என்று கண்டிப்பு செய்வார். கார்கள் ஸ்பீடா ஒடி ஒன்றை ஒன்று முந்தக்கூடாது ; பையன்கள் ரோட்டிலே ஜாலியா வட்டு உருட்டிக்கிட்டுப் போகப்படாது என்றெல்லாம் கார்வார் பண்ணினர். பையன்கள் ரப்பர் அல்லது இரும்பு வளையத்தை குச்சியால் தட்டித்தட்டி ஒட்டி கூடவே ஓடுவதை பார்த்தால், அவர் சவுக்கினல் சுண்டி அந்த வளையத்தை எடுத்து தூர வீசி எறிவார். குப்பைத் தொட்டியில் வீசுவார்; பக்கத்திலே முனிசிபல் குப்பை வண்டி டோனல் அதில் போட்டுவிடுவார். அதே பையன்கள் மீண்டும் அதே குற்றத் தைச் செய்வதைப் பார்த்தால் சவுக்கினல் அவர்கள் மீதே சுண்டுவார். அவர் எந்த வேளையில் எந்தப்பக்கம் ஆஜராவார் என்று சொல்லமுடியாது. எந்நேரமும் சுற்றிக்கொண்டே யிருந்ததால், வாய்க்காங்ரை, குளத்தோரம், சந்துபொந்து, பெரிய வீதி என்று நெடுக அவர் மோட்டார் பைக் ஓடியதால், எங்கும் எல்லோரும் சாந்தப்ப பிள்ளையையும் அவர் ச வுக்கடி யையும் நினைத்து பயந்தபடியே செயல்புரிந்தார்கள். தெருக் களே, ரோட்டோரங்களே அசிங்கப்படுத்தும் காரியங்களே செய்ய அஞ்சினர்கள். சவுக்கடி சாந்தப்பபிள்ளே என்ற பேரு எங்கும் பிரபலமாக இருந்தது.

இப்படி அவர் பெயர் பல ஜில்லாக்களிலும் பிரபலமாகி யிருந்ததால், அவர் அதை பயன்படுத்தி ரொம்ப நிறைய சொத்து சேர்த்திருப்பார் என்று பலரும் கருதினர்கள். ஒரு முறை பாளையங்கோட்டைக்கு வந்த ஐ. ஜி. ஆவ் போலீஸ் சாந்தப்ப பிள்ளையிடமே கேட்டார் : இதுவரை நீர் எவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறீர்? லட்சக்கணக்கிலே பணம் சேர்த் திருப்பீர் என்று பேசப்படுகிறதே? சாந்தப்பபிள்ளை புன் னகை புரிந்தார். பத்து லட்சம் சேர்ந்திருக்கு என்ருர், அதுபற்றி மேலும் ஐ. ஜி. விசாரிக்கவும், எல்லாம் மூவபிள் பிராப்பர்டிதான். அதுகளே உங்க முன்னலே கொண்டுவந்து காட்டுறேன். கொஞ்சம் இருங்க’ என்று சொல்லி வீட்டுக் குள் போனுர். அவருக்கு ஆண்களும் பெண்களுமா பத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/138&oldid=589382" இலிருந்து மீள்விக்கப்பட்டது