பக்கம்:நினைவுச்சரம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரம் 139

பிள்ளைகள். அவர்களுக்கு நல்ல ஆடைகள் அணிவித்து, சீவிச் சிங்காரித்து, வயது வாரியா, வரிசைப்படுத்தி ஐ. ஜி. முன்னே கொண்டுவந்து நிறுத்தினர். குழந்தைகள் பணி வோடு வணங்கினர்கள். இவைதான் என்னுடைய பத்து லட்சம். ஒவ்வொரு பிள்ளேயும் எனக்கு ஒரு லட்சரூபாய் சொத்து. இவை தவிர எனக்கு சொத்தோ பணமோ சேரலே. சம்பளத்தைக்கொண்டு ஸிம்ப்பிளா வாழ்க்கை நடத்துருேம் ? என்று பிள்ளே தெரிவித்தார். அவருடைய உயர்ந்த பண்பை யும் நேர்மையையும் அறிந்த ஐ. ஜி. சாந்தப்பபிள்ளையை பாராட்டி, குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவரைப்பற்றி நல்ல ரிப்போர்ட் எழுதி, உத்தியோக உயர் வுக்கும் சிபார்சு செய்தார்.

இதெல்லாம் அந்நாட்களில் மக்களால் உயர்வாகப் பேசப் பட்ட பெருமைகள். பள்ளிக்கூடத்தில் படிக்கிற பையன்கள் கூட போகிற வருகிற வழிநெடுக சாந்தப்பபிள்ளேயின் பெரு மைகளைப் பற்றிப் பேசி மகிழ்ந்து போனர்கள். ஹாரன் சக்ரவர்த்தி அருணுசலம் பற்றியும் அவர்கள் பேசினர்கள்.

தண்ணிக்குப் போ மகளே-தலைகுனிந்து வா மகளே !? என்று ட்ரைவர் அருணுசலம் எந்த மகளுக்கோ ஹாரன் மூலம் உல்லாச எச்சரிக்கை செய்தபடி நாலாவது ட்ரிப் ஆக அருமையான ரஸ்தாவில் பஸ்ஸை உற்சாகமாக ஒட்டிக் கொண்டிருந்தபோது, சாந்தப்பபிள்ளையின் மோட்டார் பைக் அந்த பஸ்ஸின் அருகில் ஒடியது. அவர் சவுக்கின் சுண்டுதல் ஹாரன் சக்கிரவர்த்தி கையை விசாரித்தது. ‘என்ன இது ? ஒழுங்கா ட்ரைவ்பண்ணு. இப்படிப் போனல் ஆக்ஸிடென்ட் ஏற்படும். இனியும் இதுமாதிரி நடந்தியோ, சார்ஜ் பண்ணிடு வேன் என்று எச்சரித்துவிட்டு சவுக்கடி சர்க்கிள் தனது வழியே போனர். இதையும் பையன்கள் வியந்து பேசி மகிழ்ந்தார்கள்.

மயிலேறும் பெருமாள்பிள்ளை கதைபோல் இதை எல்லாம் பால்வண்ணம்பிள்ளையிடம் சொல்லித் தீர்த்தார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/139&oldid=589383" இலிருந்து மீள்விக்கப்பட்டது