பக்கம்:நினைவுச்சரம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுக்

140

அவரும் ரசித்துக் கேட்டார். பிறகு சொன்னர் : எனக்கும் சிலசமயம் தோனும் அண்ணுச்சி. ஊர்களிலே அட்டூழியங்கள்,

தெருக்களிலே நடக்கிற அநியாயங்கள், அக்கிரமங்கள், அசிங்கங்களே எல்லாம் பார்க்கிறபோதுதான் ; நம்ம சனங்கலே iலே திருந்தமாட்டாங்க, சவுக்கால அடிச்சுத் தான் திருத்தனும் , முன் காலத்திலே கொடுத்தமாதிரி சவுக் கொடுத்து கற்றுக் கொடுக்கணுமின்னு. இதை நாற்பத் தஞ்சு நாற்பத்தாறு வருசங்களுக்கு முன்னடி சாந்தப்பபிள்ளே செயலிலே செய்து சாட்டியிருக்காரு. பேஷ் 12

தான் இன்று நினைப்பதை அன்றே ஒருவர் சாதித்துக் _குந்திருக்கிருரே என்ற சந்தோஷம் அதிருக்கு

&

பேஷ் பேஷ் சவுக்கடி சாந்தப்பன்களும் நாட்டுக்குத்

தேவைதான் என்று சொல்லிக்கொண்டார்.

இரண்டு பேரும் பாளயங்கோட்டைக்கு பஸ்ஸிலேயே போவது என்று தீர்மானித்தார்கள். முதலில் என். ஜி. ஒ. காலனி, எழில்நகர், ஹைகிரவுன்ட் இதுகளே எல்லாம் உரியம் பஸ்களிலேயே போய் பார்த்துவிடுவோம். அப்புறம் நமக்குப் பழக்கமான பழைய தெருக்களில் ஒரு நடை நடந்து, அப் படியே வடக்கு பஜார்போய், கோட்டுர் ரோடு வழியா ஊர்ப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தம்பியாபிள்ளே போட்ட பிளான அண்ணுச்சி ஏற்றுக்கொண்டார்.

பாளே பங்கோட்டை ரொம்பவும் வளர்ந்துவிட்டது. பெருமாள்புரம், மகாராஜபுரம், என். ஜி. ஒ. காலனி, ஸ்டேட் பாங்க் எம்ப்ளாயிஸ் காலனியான எழில் நகர் என்று நீண்டு கொண்டே போய், இன்னும் வளர்ந்துகொண்டிருந்தது. முன்பு பெரியபிள்ளேக்கு அறிமுகமாகியிருந்த ஹைகிரவுண்ட்” இப்போது இல்லவே இல்லே!

அந்தக் காலத்தில் ஹைகிரவுண்ட்” ஒரு சுகவாசஸ் தலம். பாளையங்கோட்டையிலிருந்து இரண்டு மைல் கிழக்கே தள்ளியிருந்த மேட்டுநிலம், வசதி மிகுந்தவர்களும், வெள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/140&oldid=589384" இலிருந்து மீள்விக்கப்பட்டது