பக்கம்:நினைவுச்சரம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 நினைவுச்

திலேயிலேயே இருக்குது ; அல்லது தேஞ்சு போகுது’ என்று பால்வண்ணம் குறிப்பிட்டார்.

அவர்கள் அங்கேயே ஒரு ஒட்டலில் காப்பிமட்டும் குடித் தார்கள். பஸ்ஸில் ஏறி பாளேயங்கோட்டை சேர்ந்தார்கள்.

தெற்கு பஜார், கோபாலசாமி கோயில் மாடவீதிகள், ரதவீதிகள் எல்லாம் பெரும் மாறுதல் எதையும் பெருமல்நாகரிக நகரத்துக்குரிய பரபரப்போ பகட்டோ கும்பல் நெருக் கடியோ இல்லாமல், தூங்கிவழியும் தோற்றத்தில்தான் தென் பட்டன. -

என் கூடப்படிச்சவர் ஒருவர் மெட்ராசிலே இருக்கார். சில வருஷங்களுக்கு ஒருதடவை இங்கே வருவார். ரொம்பப் பிரியமா, குட் ஒல்ட் பேலம்கோட்டா (Good old Palamcottah) அன்னேக்கு இருந்த மாதிரியேதான் இன்னேக்கும் இருக்கு ; என்னே மாதிரித்தான் அதுவும் இருக்கு ; புறப் பாதிப்புகளிளுலே தீவிரமா அசைக்கப்படாமல் அப்படியே, என்று குறிப்பிடுவார். அவர் இந்த வட்டாரத்தை மனசிலே வச்சுக்கிட்டுத்தான் அப்படிச் சொல்ற வழக்கம் என்ருர் பாவன்ன. - அவர்கள் மார்க்கெட்டுக்குள் போய் காய்கறிகள் வாங் கினர்கள்.

  • மார்க்கெட்டின் பழைய அழகு கெட்டுப்போச்சுதே. முன்பு விசாலமா, அமைதியும் அழகும் நிறைஞ்சதா இருந்துது. இப்போ குறுகி, நெருக்கடி மிகுந்து, எல்லாவித மான கடைகளும் இடிச்சு நெருக்கிகிட்டு, என்னமோ மாதிரி இருக்குதே என்று பெரியபிள்ளே வருத்தப்பட்டார்.

அப்புறம் வடக்கு பஜாரில் தேவையான சாமான்களை வாங்கி, பையில் வைத்துக்கொண்டு, ஒரு ஒட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு, கோட்டுர் ரோடு வழி நடந்தார்கள்.

தென்வடலாய் நீண்டு கிடக்கும் குறுகிய அந்தத் தெரு வின் தெற்குப்பகுதியில், ஆரம்பத்தில், கடைகள் நெருக்க மாகக் காணப்படும். அடுத்து வசதி உள்ளனவும் இல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/144&oldid=589388" இலிருந்து மீள்விக்கப்பட்டது