பக்கம்:நினைவுச்சரம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 147

யித்தது அவர் மனம். அந்தச் செம்பகமா இப்படிக் கிழவி ஆகி...' என அதிர்ந்தது. ஒளி மினுமினுக்கும் கண்களும், அந்த மூக்கும், சிரிக்கும் உதடுகளும் மோவாயும், இப்போ கவனித்துப் பார்க்கையில் ஆளே அடையாளம் காட்டும் மிச்ச சொச்சங்களாக இன்றும் அமைந்துகிடப்பது பட்டது.

அவர் ஒன்றும் பேசாமல் தன் முகத்தையே பார்த்த டி. நின்றுவிட்டதைக் கண்டு, இன்னும் ஐயாவுக்கு அடை யாளம் பிடிபடலேயா ?’ என்று சிரித்துக்கொண்டே அவள் கேட்டாள்.

புரியாமல் என்ன! நல்லாத் தெரியுது. எப்படி இருந்தவ எப்படி ஆகி இருக்கிறே என்ற திகைப்பிலே என்னலே ஒண்னும் பேசமுடியலே என்ருர் பிள்ளை, உணர்வின் தள தளப்பு அவர் குரலில் வேலை செய்தது.

வீட்டுக்கு வாங்க ஐயா. இப்படி தெருவிலே நிறுத்தி வைச்சிருக்கேனே நானும்...? .

இல்லே, நாங்க போருேம். காலேயிலேயே ஊரைவிட்டு வந்திட்டோம். இந்தப் பாதை வழியே போயி பழகின ஊர் களே பார்த்துக்கிட்டே போகலாமேன்னு இப்படி நடந்து வந்தோம்...” .

அது எனக்கு நல்லகாலமா அமைஞ்சிருக்கு. பழகின பழைய ஆளுன்னு என்னையும் மதிச்சு, தயவு செய்து என் வீட்டையும் மிதிச்சிட்டுப் போகணும் என்று அவள் வேண் டினுள். ஐயா, தயவுசெஞ்சு நீங்களும் வரனும் என்று பால்வண்ணத்தையும் கேட்டுக்கொண்டார்.

அவள் பணிவுடன் வேண்டிக்கொண்ட விதமும், வர வேண்டுமே என்ற ஆவலும் ஏக்கமும் கலந்த பாவத்துடன் நோக்கிய விதமும், வரமாட்டோம் என்று தட்டிவிட்டு வழி யோடு போனல் அந்த ஏமாற்றத்தில்ை அவள் கண்டிப்பாக மனவருத்தம் மிகுதியாகக் கொள்வாள் என்று எண்ண வைத்தன. அதனுல் அவள் வேண்டுதலே மறுக்கமுடியாமல் அண்ணுச்சி தம்பியை பார்க்க, தம்பியாபிள்ளை போயிட்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/147&oldid=589391" இலிருந்து மீள்விக்கப்பட்டது