பக்கம்:நினைவுச்சரம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நினைவுச்

தான் போவமே என்க, `உம்' என்று @ມກົມ; முன் நடக் கவும், மகிழ்ச்சி பூத்துக்கிடந்த செண்பகத்தின் முகத்திலே சூரியப் பொன்ைெளி வந்து தங்கியது போன்ற ஜொலிப்பு ஏற்பட்டது.

அவள் அவசரமாகப் படிகள் ஏறி உள்ளே விரைந்தாள். அங்கு நின்ற மகளிடம் ஏதோ சொல்லிவிட்டு, பாயை எடுத்து விரித்தாள். வந்துகொண்டிருந்த இருவரையும் வாங்க வாங்க என்று உபசரித்தாள். உட்காருங்க உட்காருங்க? என்ருள்.

அவர்கள் அமர்ந்தார்கள். -

{ குடிக்கத் தண்ணி வேனும்’ என்ருர் பெரியவர்.

'இதோ ? என்று உள்ளே விரைந்து, ஒரு செம்பு நிறைய குளிர்ந்த நீரும், இரண்டு டம்ளர்களும் எடுத்துவந்து அவர் களுக்கு முன்னே வைத்துவிட்டு விலகி, துணருகே போய் தின்ருள் செண்பகம். .

இரண்டுபேரும் தண்ணிர் குடித்தார்கள்.

எப்படி இருக்கிறே? இங்கே எப்ப வந்தே?? என்று பெரியபிள்ளே கேட்டார். - -

ஊம், இருக்கேன். நான் பாளையங்கோட்டைக்கு வந்து ஒரு வியாழவட்டம் ஆயிட்டுது. பன்னிரண்டு வருசமா இதே வீட்டிலேதான் இருக்கிறேன். என் கதையை இந்த சந்தோச நேரத்திலே ஏன் சொல்லனும்? எவ்வளவு கஷ்டங்கள் படனுமோ அவ்வளவும் பட்டாச்சு. இன்னும் ஈசன் என் தலேயிலே என்ன எழுதியிருக்கானே, அதையும் அனுபவிக் கத்தானே வேணும்? அனுபவிக்கமாட்டேன்னு சொன்னக் கண்டா அவன் விட்றப்போருளு?’ என்று புலம்பத் தொடங்

அவள் புலப்பத்தை நிறுத்த விரும்பியவர்போல, ஆமா. இங்கே நீ மட்டும்தான் இருக்கியா?’ என்று கேட்டுவைத்தார் 哆 امام பெரியவர். z

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/148&oldid=589392" இலிருந்து மீள்விக்கப்பட்டது